மேலும் அறிய
Advertisement
கொரோனவால் இறந்த கணவன்: துக்கத்தில் மகனை கொலை செய்து தாய் தற்கொலை!
சேலையூர் அருகே கொரோனவால் கணவன் இறந்த துக்கத்தில் மகனை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் உருவாக்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது , வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் நடு நடுங்க வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை 4,470,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவிற்கு வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது, மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். வைரஸ் கிளீன் காரணமாக அதுமட்டுமின்றி பலர் தங்கள் உறவினர்களை இழந்து மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன், பாலஈஸ்வரி தம்பதி இவர்களுக்கு 8 வயதில் லக்சத் நாராயணன் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று மாதத்திற்க்கு முன்னர் ரவிசந்திரன் கொரோனா நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்தார் . இதனால் பால ஈஸ்வரி தனது மகனுடன் மாடம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிரியில் தனது மகனை புடைவையால் தூக்கிலிட்ட பின்னர் பால ஈஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . வீடு திரும்பிய சகோதரி வெகு நேரமாகியும் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலிசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பாலஈஸ்வரியின் சகோதரி கூறுகையில், தனது கணவர் மீது ஈஸ்வரி மிகுந்த பாசமாக இருந்து வந்தார். எதிர்பாராவிதமாக வைரஸ் தொற்றால் கணவனை பறிகொடுத்த காரணத்தினால், தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தார் என தெரிவித்தார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion