சண்டை போட்டுக் கொண்டிருந்த அம்மா - அப்பா; தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிரை விட்ட மகன்
குன்றத்தூரில் பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தி எடுத்து மார்பில் குத்தி கொண்டு இறந்து போன மகனால் பரபரப்பு
கணவன், மனைவி இடையே தகராறு
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரன் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் பாலகிருஷ்ணன் (19), குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல், தனது மனைவிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இன்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கத்தியை எடுத்து குத்தி கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.
ரத்த வெள்ளத்தில்
இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தொடர்ந்து தகராறு செய்து வருவதால், அசிங்கமாக உள்ளதாக கூறி தந்தையின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி பாலகிருஷ்ணன் தனது மார்பில் வேகமாக குத்திக் கொண்டதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையடுத்து பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர் .பெற்றோர் சண்டை போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையிடம் இருந்த கத்தியை வாங்கி மகனே குத்திக் கொண்டு இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)