மேலும் அறிய

Crime : வாட்ஸ் அப் குழு மூலம் போதை மாத்திரை விற்பனை...! இளம்பெண் உள்பட 3 பேர் கைது...!

சென்னையில் வாட்ஸ் அப் மூலமாக போதை மாத்திரை விற்பனை செய்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள்களின் விற்பனை மிக அதிகளவில் காணப்பட்டு வருகிறது. சட்டவிரோதமான இந்த விற்பனையை தடுத்து நிறுத்த போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தலைநகரான சென்னையில் போதைப்பொருளின் விற்பனை கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள திருமங்கலம் அருகே அமைந்துள்ள பிரபல வணிக வளாகம் அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியைச் சுற்றிலும் அணணாநகர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Crime : வாட்ஸ் அப் குழு மூலம் போதை மாத்திரை விற்பனை...! இளம்பெண் உள்பட 3 பேர் கைது...!

இந்த நிலையில், நேற்று அந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் அங்குமிங்கும் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக அந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் போதை மாத்திரைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, அவரை  காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் அயனாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 28) என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்தைப் போலவே சாகுல் ஹமீது ( வயது 21) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ( வயது 24) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Crime : வாட்ஸ் அப் குழு மூலம் போதை மாத்திரை விற்பனை...! இளம்பெண் உள்பட 3 பேர் கைது...!

இதையடுத்து, சாகுல் ஹமீது மற்றும் டோக்கஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை விற்பனைக்கென இவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக இவர்கள் போதை மாத்திரை விற்பனைக்கென்று ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரை, போதை ஸ்டாம்புகள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு பட்டதாரி பெண் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதை விற்பனை தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்ட இடம் அருகே அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற மது விருந்தில் இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

P Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORT

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget