மேலும் அறிய
Advertisement
மது போதையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை.. நண்பன் மீது சந்தேகம்.. செங்கல்பட்டில் என்ன நடந்தது?
வாய்த்தகராறில் பெயிண்டர் மாரிமுத்து கற்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா, முன்விரோத தகராறில் பிரபாவே அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் மாரி (எ) மாரிமுத்து (50). பெயிண்டரான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் ஓய்வு நேரத்தில் செங்கல்பட்டு, பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூங்குவாராம். இந்த நிலையில், இன்று அதிகாலை தலை நசுங்கிய நிலையில் பெயிண்டர் மாரிமுத்து இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே 4 பெரிய கருங்கற்கள் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். பின்னர் பெயிண்டர் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மாரிமுத்துவுடன் சேர்ந்து பாழடைந்த வீட்டில் பிரபா என்பவர் தூங்குவாராம். ஆனால் இன்று காலை அவருடன் தங்கியிருந்த பிரபாவை காணவில்லை. எனவே, அவர்தான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் போலீசார் கூறுகின்றனர்.மது அருந்தும்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பெயிண்டர் மாரிமுத்து கற்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா, முன்விரோத தகராறில் பிரபாவே அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion