மேலும் அறிய
Advertisement
காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?
வாயலூரில் தான் நடத்தி வந்த சிறுவர் காப்பகத்தில் வளர்ந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கா்ப்பிணியாக்கி போக்சோ வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிறிஸ்துவ பாதிரியார்..
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள வாயலூரில், தான் நடத்தி வந்த சிறுவர் காப்பகத்தில் வளர்ந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கா்ப்பிணியாக்கி போக்சோ வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிறிஸ்துவ பாதிரியாரை மாமல்லபுரம் மகளிர் போலீசார் கோயம்பேடு போலீசார் உதவியுடன் சென்னையில் உள்ள ஓட்டலில் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது59), இவர் தனது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த பாதியார் சார்லஸ் தலைமறைவானார். இதையடுத்து அச்சிறுமியின் உறவினர் பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 1½ வருடங்களாக தலைமறைவாக உள்ள அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாகத்தில் இருந்து வெளியேறிய அவர் போலீசுக்கு பயந்து மீண்டும் தனது காப்பாகத்திற்கு வராமல் பல இடங்களில் பதுங்கி, பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் சென்னை கோயம்பேட்டில் ஒரு இடத்தில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் உணவருந்த வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயம்பேடு போலீசாரின் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பிறகு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு இங்குள்ள அரசு பொதுமருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1½ வருடமாக மகளிர் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த அவரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion