செங்கல்பட்டில் 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை
Chengalpattu News: செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் வைத்து 5-வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.

செங்கல்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வரும் 5-வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நேற்று மாலை, பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற போது பள்ளி பேருந்தின் கிளீனர் முருகன் (50) என்பவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு யாரோ ஒருவர், பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்
உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொல்லை கொடுத்த பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகன் (50) கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வேதனையில் பொதுமக்கள்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், போக்சோ வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்று குழந்தைகள் மற்றும் பெண்களிடம் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையை காவல்துறை மற்றும் அரசு இணைந்து பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகபட்ச தண்டனையை விரைவாக கொடுத்தால் மட்டுமே, இது போன்ற குற்ற செயல்கள் குறையும் என்பதை பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

