மேலும் அறிய
Advertisement
திருப்பத்தூரில் மூதாட்டியிடம் 11 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய மூதாட்டியிடம் 11 சவரன் தங்கச் சங்கிலி பறித்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்சிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அட்வகேட் ராமநாதன் தெரு பகுதி சேர்ந்த மணி இவருடைய மனைவி ராஜேஸ்வரி வயது (73) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கோட்டை தெரு பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பவும் வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே சாலையில் சிறிய மேடு இருந்துள்ளது அதில் இருசக்கர வாகனத்தில் ஏற முடியாத காரணத்தால் ராஜேஸ்வரியை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.
அப்போது இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த பதினொரு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பினர். இதன் சிசிடிவி காட்சிகள் அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion