மேலும் அறிய

Ramajayam murder: திடீர் ட்விஸ்ட்.! ராமஜெயம் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட இடம் எது.? குற்றவாளியை நெருங்கிய போலீஸ் .?

திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு திருச்சியில் உள்ள திரையரங்கில் விசாரணை நடத்தியுள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு

தமிழக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என கடந்த 13 வருடங்களாக பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முதலில் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு கிடைக்காததால்,  சி.பி.சி.ஐ.டிக்கும் அதன் பின் சி.பி.ஐக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வேகமெடுத்தது.

13ஆண்டுகளாக தொடரும் சோதனை

சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மீண்டும் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய 12 ரவுடிகளை தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அடுத்ததாக ராமஜெயம் கொலை வழக்கை டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு  விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி டிஐஜி யாக இருக்கக்கூடிய வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய வருண்குமார், தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட முக்கிய ரவுடிகளிடம் ராமஜெயம் கொலை தொடர்பாக நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.  இந்த பரபரப்பான நிலையில் திருச்சியில் பிரபலமான பாலக்கரை அருகே உள்ள காவேரி திரையரங்கில் திடீரென விசாரணை நடத்தினார். 

திரையரங்கில் திடீர் சோதனை

இந்த விசாரணையின் போது திரையரங்க உரிமையாளரிடமும், திரையரங்கில் பணி புரியும் ஊழியர்களிடமும் பலவித கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் அந்த திரையரங்கம் சசிகலாவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலர் கைக்கு திரையரங்கம் மாறியுள்ளது. எனவே கொலை நடந்த சமயத்தில் திரையரங்கில் வைத்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 13ஆண்டுகளாக நீடித்து வந்த மர்மம் எப்போது முடிவுக்கு வரும் என திமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் காத்துள்ளனர். 

 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"காதலிக்கா விட்டால் ஆசிட் வீசுவேன்" - மாணவியை மிரட்டிய இளைஞர் !! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாலியல் புரோக்கரிடம் வாங்கிய ரூ.2 லட்ச கடன் - வாலிபர் அடித்துக் கொன்று புதைப்பு -நடந்தது என்ன ?
பாலியல் புரோக்கரிடம் வாங்கிய ரூ.2 லட்ச கடன் - வாலிபர் அடித்துக் கொன்று புதைப்பு -நடந்தது என்ன ?
ஆசை ஆசையாய் காதல் திருமணம்! 4 மாதங்களில் ராஜேஸ்வரி விபரீத முடிவு! அப்படி என்ன செய்த கணவர்?
ஆசை ஆசையாய் காதல் திருமணம்! 4 மாதங்களில் ராஜேஸ்வரி விபரீத முடிவு! அப்படி என்ன செய்த கணவர்?
உடலை நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்றது ஏன்? செவிலியரை கொன்ற கொடூரன் அதிர்ச்சி வாக்குமூலம்
உடலை நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்றது ஏன்? செவிலியரை கொன்ற கொடூரன் அதிர்ச்சி வாக்குமூலம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
Weather Update: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Embed widget