மேலும் அறிய
நாகை ஆட்சியர் அலுவலக உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்
உணவகத்திற்குள் புகுந்த நபர் அங்கு சாப்பாடு பார்சல் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் இந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளார்

தாக்கப்பட்ட பெண்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மகளிர் சுய உதவி குழு உணவகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திட்டச்சேரி பகுதி சேர்ந்த செண்பகம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பில் உணவகம் இயங்கி வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தினம் தோறும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக வந்து செல்லும் பொதுமக்கள் என காலை மதியம் இரு வேலைகளிலும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகள் இங்கு உணவகத்தில் உண்டு செல்கின்றனர். வழக்கம் போல நேற்று மதியம் பரபரப்பாக காணப்பட்ட உணவகத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் கட்டுமாவடியை சேர்ந்த இந்திரா உள்ளிட்டோர் உணவு தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உணவகத்திற்குள் புகுந்த நபர் அங்கு சாப்பாடு பார்சல் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் இந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த இந்திரா மயங்கி விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத உணவகத்தில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மேலும் காயம் அடைந்த இந்திராவிடம் நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன், எஸ்ஐ இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் உணவகத்தில் ஏற்கனவே பணி புரிந்த கட்டுமாவடியை சேர்ந்த ஜானகி என்பவரின் கணவர் சங்கர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தப்பி ஓடிய சங்கரை தேடிவந்த நிலையில் திட்டச்சேரி பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சங்கரை நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நாகை மாவட்ட சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் பரபரப்பான ஆட்சியர் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து உணவக பெண் உரிமையாளர் தாக்கிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion