சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்பு? கோட் வேர்டு பயன்பாடு? ஆர்யன் கான் வழக்கில் அதிர வைக்கும் தகவல்கள்
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்பு? கோட் வேர்டு பயன்பாடு? ஆர்யன் கான் வழக்கில் அதிர வைக்கும் தகவல்கள் Aryan Used Codes To Buy Drugs, Chats Show International Drug Trafficking: NCB சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்பு? கோட் வேர்டு பயன்பாடு? ஆர்யன் கான் வழக்கில் அதிர வைக்கும் தகவல்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/05/1695c9c05dfa3fefd361cf82641ff8a1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, போதைப் பொருளுக்காக ஆர்யன் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் வாட்ஸ் அப்பில் உரையாடியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் தங்களுக்கு என்ன விதமான போதைப் பொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்க கோட் வேர்டு அதாவது ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் எப்படி பணத்தைக் கொடுப்பது என்பது தொடர்பான தகவல்களையும் பரிமாறியுள்ளனர்.
ஆர்யான் கான், அப்பாஸ் மெர்ச்சன்ட், மூன் மூன் தபேச்சா உள்ளிட்ட 8 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பலான கார்டீலியாவில் ஆர்யன் கானும் அவரது நண்பர்களும் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடித்ததாக என்சிபி கூறியுள்ளது.
8 பேரில் இவர்கள் மூவரின் ஜாமீன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்தத் தவறினால் அது என்சிபிக்கு தான் இழப்பு என்று வாதிடப்பட்டது. மேலும், இவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால் தான் போதைப் பொருள் விற்பனை கும்பலையும் பிடிக்க முடியும் என்று வாதிடப்பட்டதால் வரும் 7 ஆம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் தான், அவர்கள் தங்களுக்கு என்ன விதமான போதைப் பொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்க கோட் வேர்டு அதாவது ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது.
யார் இந்த அர்பாஸ் மெர்சன்ட்?
நாம் அனைவரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீது மட்டுமே கவனமாக இருக்கிறோம். ஆனால், இந்த வழக்கில் சிக்கிய அனைவருமே ஹை புரொஃபைல் பேர்வழிகள்தான். அர்பாஸ் மெர்சன்ட் என்ற ஆர்யனின் நெருங்கிய நண்பர் அஸ்லாம் மெர்சன்ட் என்ற பெரும் பணக்காரரின் மகன். இவர் மர வியாபார தொழில் செய்கிறார். இதைவிட முத்தாய்ப்பானது அர்பாஸ் மெர்சன்ட்டின் தந்தைவழி தாத்தா ஒரு நீதிபதியாக இருந்தவர் என்பதே.
மூன்மூன் தமேச்சா என்ற பெண் ஒரு மாடல் அழகி. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30.5K பேர் பின் தொடர்கின்றனர். அக்ஷய் குமார், விக்கி கவுசால் போன்ற பிரபலங்கள் கூட இவரைப் பின் தொடர்கின்றனர். ஆனால் இவருக்கு வயது 39. இவர் தான் மற்ற ஸ்டார் கிட்ஸ்களுக்கும் சர்வதேச போதைப் பொருள் விற்பனைக் கும்பலுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)