அடக்கடவுளே! முதலிரவில் கணவர் செய்யும் காரியமா இது? - தூக்கி உள்ளே வைத்த போலீஸ் - நடந்தது என்ன?
முதலிரவில் மனைவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரபாகு. வீரபாகுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் நடத்த கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி இருவீட்டு பெற்றோர்களும் முடிவு செய்தனர்.
திருமணம்:
அதையடுத்து, கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிவடிந்ததையடுத்து, வீரபாகுக்கும், அவரது மனைவிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, கொஞ்சம் கூட சுயபுக்தி மற்றும் பகுத்தறிவு இல்லாத வீரபாகு, அவரது மனைவிக்கு தெரியாமல் தனது முதலிரவு நிகழ்வை, செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அவர்களது முதலிரவு காட்சியை, கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பலருக்கும் பரவிய நிலையில், மனைவியின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்தது.
பஞ்சாயத்து:
இவ்விஷயத்தால், மனைவியின் தாயார் கடும் கோபமும், கவலையும் அடைந்தார். இதையடுத்து, இவ்விவகாரம் பெரிதாக உருவெடுத்ததை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டாதாக கூறப்படுகிறது. அந்த பஞ்சாயத்தில், இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால், செய்தது தவறை மன்னிக்க முடியாது என்று, இளம்பெண்ணின் தாயார் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மாப்பிள்ளையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு:
இந்நிலையில், இச்சம்பவத்தை அறிந்த பலரும், ஏன் இதுபோன்ற ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் என்றும், மகளை திருமணம் செய்து வைப்பதற்கு முன்பு சரியாக விசாரித்துவிட்டு செய்து வைத்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் நடந்த முதல் நாளே, தனது மனைவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட மனிதத்தன்மையற்ற செயலை செய்த வீரபாகு போன்றோர்களின் செயல்கள் இச்சமூகத்தில் களையப்பட வேண்டும்.