மேலும் அறிய
Advertisement
கூலிங் கிளாஸ்.. கையில் மொபைல்.. முகத்தில் மாஸ்க்.. நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் நடிகை யாஷிகா
மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது..
2K கிட்ஸ் நடிகை
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் சமூகவலைதளங்களில் இன்ஸ்டாகிராம், டிக்டாக், ரீல்ஸ்கள் செய்து பிரபலமான காரணத்தினால் , நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த ஜூலை மாதம் 2021 யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிசெட்டி பவனி (28). தெலங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் , இவர் சென்னை வந்திருந்தபொழுது நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு திரும்பி வந்தபொழுது விபத்து ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
என்ன நடந்தது அன்று ?
ஜூலை மாதம் 2021, நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நடிகை யாஷிகாஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து யாஷிகா ஆனந்திற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
நீதிபதி பிடிவாரண்ட்
ஒருபுறம் யாஷிகா ஆனந்த் உடல்நிலை சீரடைந்து படங்களில் நடித்துக் கொண்டும் மற்றும் சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்கள் வட்டாரத்தில் ஆக்டிவாக இருந்து வந்தாலும், மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர் ஆகாததைத் தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். . யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா
இதனை அடுத்து இன்று செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரீ கால் மனு அளித்திருந்த நடிகை யாஷிகா, நேரில் ஆஜராகி உள்ளார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிமன்ற அலுவலகத்திற்கு வெளியே நடிகை யாஷிகா ஆனந்த் பல மணி நேரமாக காத்திருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்திடம் நீதிபதி விளக்கம் கேட்பார் என தகவல் தெரிவித்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிடிவாரண்டில் இருந்து தப்பிப்பதற்காகவே யாஷிகா ஆனந்த் தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion