Crime : சாதி மாறி காதல் செய்த அக்கா..! கழுத்தை நெரித்துக் கொன்ற தம்பி..! காதலனையும் சுட்டுக்கொன்ற கொடூரம்..!
மகாராஷ்ட்ராவில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அக்காவையே தம்பி கழுத்தை நெரித்தும், அக்காவின் காதலரை துப்பாக்கியால் சுட்டும் தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஜல்கான் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சஞ்சய் ராஜ்புத் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்துள்ளது.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ராகேஷை, தங்கள் வீட்டு பெண்ணிடம் பேசவும், பழகவும் கூடாது என்று மிரட்டியுள்ளனர். ஆனாலும். இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகேஷிம் அந்த இளம்பெண்ணும் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதைக்கண்ட சிலர் அந்த இளம்பெண்ணின் தம்பியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணின் தம்பியான 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் இருவரும் பேசிக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் காருக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க : Independence Day 2022 Wishes: 75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!
இதைக்கண்டு ஆத்திரமடைந்த அந்த 17 வயது சிறுவன் தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த துப்பாக்கியால் ராகேஷை தலையில் சுட்டுள்ளான். இதைக்கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால், சொந்த அக்கா என்றும் பாராமல் அந்த சிறுவனும், அவனது நண்பர்களும் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை அந்த பெண்ணின் துப்பட்டாவில் கழுத்தை நெரித்துள்ளனர். இதில், அந்த பெண் சம்பவ இடத்திலே மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, அந்த 17 வயது சிறுவன் தானே காவல் நிலையம் நேரில் சென்று சரண் அடைந்துள்ளான். போலீசார் சம்பவம் நடைபெற்ற வராத் சாலைக்கு சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 17 வயது சிறுவனுடன் மேலும் இரு சிறுவர்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற மூவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்தார் என்ற காரணத்தால், தனது சொந்த அக்காவையும், அவரது காதலரையும் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு இதுதான்!
மேலும் படிக்க : Rakesh Jhunjhunwala: பில்லியனர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நல குறைவால் மரணம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்