search
×

இனி மருத்துவ ஆவணங்கள் தேவையில்லை… சுலபமாக லைஃப் இன்சுரன்ஸ் பெற இத மட்டும் செய்யுங்க..

வீட்டை விட்டு வெளியே வராமலும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை யோனா எஸ்பிஐ மூலம் நாம் பெற முடியும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

FOLLOW US: 
Share:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் லைப் இன்சுரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும்  அதற்குப்பதிலாக எஸ்பிஐயின்  யோனா ஆப்பைப் (SBI yono) பயன்படுத்தி சுலபமாக மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட பொதுத்துறை நிறுவனம் தான் ஸடேட் பாங்க் ஆப் இந்தியா. வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்வதற்காகவே புதிய புதிய அறிவிப்புகளையும், ஆஃபர்களையும் வழங்கிவருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்குமான லைப் இன்சுரன்ஸ்களை வழங்கி வருகிறது. முன்னதாக இந்த ஆயுள் காப்பீட்டு வசதிகளை பெற வேண்டும் என்றால், நாம் மேற்கொண்ட மருத்துவப்பரிசோதனையின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

ஆனால் இன்றைய கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு லைப் இன்சுரன்ஸ் திட்டத்தைப் பெற வேண்டும் என்றால் சாதாரணக் காரியம் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலே கொரோனா தொற்று ஏற்பட்டுவிடமோ என்ற அச்சத்தில் யாரும் இதற்கு முன்வர மாட்டார்கள். எனவே இதுப்போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும், குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வராமலும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை நாம் பெற முடியும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதில், நீங்கள் உங்களது லைப் இன்சுரன்ஸ் பாலிசி அதாவது ஆயுள் காப்பீட்டுக்கொள்கைளைப் பெற வேண்டும் என்றால் மருத்துவப் பரிசோதனை அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்க தேவையில்லை எனவும் அதற்குப் பதிலாக எஸ்பிஐ யோனா ஆப் ( SBI YONO) மூலம் எளதில் பெறலாம் என டிவிட் செய்துள்ளது.  இதோ அதற்கான வழிமுறைகள்…

முதலில்  பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் SBI Yono செயலிக்குள் செல்ல வேண்டும்.

பின்னர் நீங்கள் காப்பீடு (Policy) பிரிவுக்குச் செல்ல வேண்டும்.

இதனையடுத்து “buy a policy” என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அதனுள், Life insurance section க்குள் செல்ல வேண்டும்.

இறுதியில், நீங்கள்  Group Term Plan விருப்பத்தைப் பெறுவீர்கள்.

இதனைப்பயன்படுத்தி உங்களுடைய லைப் இன்சுரன்ஸ் பாலிசியை நீங்கள் எந்தவித மருத்துவப்பரிசோதனைச் சான்றிதழ்கள் இல்லாமலே எளிதில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிப்பை டிவிட்டரில் பார்த்த எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை டிவிட் செய்துவருகின்றனர்.

Published at : 24 Feb 2022 01:28 PM (IST) Tags: sbi bank Life insurance policy SBI YONO SBI life insurance YONOSBI SBI twitter

தொடர்புடைய செய்திகள்

ITR 2024: AIS-இல் வந்தது புதிய மாற்றம்..!  வரி செலுத்துவோருக்கு என்ன நன்மை தெரியுமா?

ITR 2024: AIS-இல் வந்தது புதிய மாற்றம்..! வரி செலுத்துவோருக்கு என்ன நன்மை தெரியுமா?

EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?

EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?

EPFO Life Insurance: பி.எஃப் கணக்கு இருக்கா..! உங்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச லைஃப் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா?

EPFO Life Insurance: பி.எஃப் கணக்கு இருக்கா..! உங்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச லைஃப் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா?

PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?

Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?

டாப் நியூஸ்

Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு

Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்

Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?