மேலும் அறிய

Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold, Silver Price : சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 38 ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 787க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 296க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் அதிரடியாக உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 30 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 835க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 38 ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 221க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 768க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராம் ரூபாய் 65க்கு விற்கப்படுகிறது. 

Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது கடுமையாக உயர்ந்துள்ளது.  தற்போதுவரை, உக்ரைனில் போர் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடுமையான ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் ஆகியவை பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கிறது. எண்ணெய் விலை 14-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.7% அதிகரித்து 26.09 டாலராகவும், பிளாட்டினம் 2.3% உயர்ந்து 1,147.19 டாலராகவும் இருந்தது.
 
Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
 
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  இரண்டு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையும்வரை போரைக் கைவிடும் திட்டம் இல்லை என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவாக இருக்கிறது.

இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Embed widget