TN Agriculture Budget 2022 LIVE: 1 மணி நேரம் 51 நிமிடம்... முடிந்த வேளாண் பட்ஜெட்டில் நடந்தது என்ன? முழு தகவல்கள் இதோ!
Tamil Nadu Agriculture Budget 2022 LIVE Updates: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள abp நாடு பக்கத்தில் காணலாம்.
என் மூளையில் உதித்தது அல்ல இந்த நிதி நிலை அறிக்கை; பலரின் இதயத்தில் உதித்தவை- வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு ரூ.30.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
திருவாரூரில் விவசாய தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வகைகள் வளர்ப்புக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
2022-2023 ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ.33007.78 கோடி
மொபைல் போன் மூலம் விவசாயிகள் மின்மோட்டாரை இயக்கும் முறைக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு
மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்டா பகுதியில் தூர்வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் உத்தரவு
தமிழ்நாட்டில் ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் விவசாயம் ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ₹15 கோடி ஒதுக்கீடு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ₹15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ₹10 கோடி ஒதுக்கீடு
தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகம் பனை மரங்கள். பனை சாகுபடியை ஊக்குப்படுத்த, 10 லட்சம் பனை விதைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பொருட்கள் தயாரிக்க 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு - வேளாண் துறை அமைச்சர்
எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு - வேளாண் துறை அமைச்சர்
10 வருசமா இதுக்கு போராடுனோம்.. இப்போ நீங்களும் (அதிமுக) இதுக்கு கை தட்டலாம்..” - வேளாண் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்தி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சு
"விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை" -வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர்
₨12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும் - வேளாண் துறை அமைச்சர்
மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ₨381 கோடி ஒதுக்கீடு - வேளாண் துறை அமைச்சர்
தேனீக்கள் வளர்ப்பிற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்திற்காக டான்ஜெட்கோவிற்கு ரூ.5157 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
கோவை வேளாண் பல்கலை மூலம் தமிழ் மண் வளம் என்ற புதிய இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான குறிப்புகள் வழங்க திட்டம்
தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை , கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
கரும்பு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950 என விலை நிர்ணயம் செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு. கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் மானியம் வழங்க, ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை அதிகரிப்பு
மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகள் இடுபொருட்களை பெரும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை. உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை
செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்
இயற்கை உரங்களை தயாரிக்கும் ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
விதை முதல் விற்பனை வரை அறிய செயலி அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி மண்டலம் அமைக்கப்படும் என அறிவிப்பு
சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு
மாவட்டம் தோறும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என அறிவிப்பு
நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ₨10 கோடி ஒதுக்கீடு
மரம் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
மரம் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
அறுவடைக்கு பிந்தைய நெல் சாகுபடிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
மண்புழு உள்ளிட்ட இயற்கை உரங்களை தயாரிக்க தமிழ்நாட்டில்100 குழக்கள் உருவாக்கப்படும் என அறிவிப்பு
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படும் விதமாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
ரூ.300 கோடி மதிப்பில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க உதவிகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது - ஐச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் தொழிலை உச்சத்திற்கு அழைத்து செல்ல நிதிநிலை அறிக்கை திட்டங்கள் உதவும் என்று கூறினார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பூண்டு சாகுபடி, நெல் சாகுபடியை அதிகரிக்க புதிய திட்டங்கள், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை மாம்பழம் வரத்து தொடங்காததால் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கிலோ மாம்பழம் ரூ. 250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மாம்பழ சீசனை தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாம்பழ கண்காட்சி நடத்தவும், மாம்பழக் கூழ் ஆலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேபோல், மாம்பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்களில் திமுக அரசு இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தநிலையில், இன்று முழு முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
நறுமண தொழிற்சாலை தேவை என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு திருத்திய வேளாண்துறை பட்ஜெட்டில் ரூ.30,220,65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதிக்கான வசதிகளை அரசு செய்து தருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தி வருகிறார்.
நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1000 கோடியும், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்காக ரூ. 600 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ. 2, 531 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
Background
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பொதுபட்ஜெட் மீதான விவாதம் 21, 22, 23ஆம் தேதிகள் சட்டப்பேரவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி விவாதத்தின் மீதான ஸ்டாலின் பதிலுரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -