அப்போது அவர் பேசுகையில், ”விஜய் கூட்டம் நடத்தியதோடு சரி. அதன் பின்னர் வெளியில் வரமாட்டேங்குறார். மக்களுடன் மிங்கில் ஆக வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். விஜய் வெளியில் வந்து பேசட்டும். அப்புறம்தான் அவரின் அரசியல் கணக்கு பற்றி சொல்ல முடியும்.
அண்ணாமலை விடும் சவாலில் கூட பிற்போக்குத்தனம் உள்ளது. செருப்பு போடாமல் இருந்த மனிதனை கூட கூட செருப்பு போட்டு நடக்கவச்சது திராவிடம். தமிழ்நாடு. சாட்டையில் அடித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் கூட பள்ளிக்கூடம் போக வேண்டும் என நினைத்தது திராவிடம். செருப்பு போட மாட்டேன், சாட்டையில் அடித்துக்கொள்வேன் என்று அண்ணாமலை சொல்வது பிற்போக்குத்தனமானது. ஸ்டாலின் நடத்தும் ஆட்சியால் அண்ணாமலை என்றைக்குமே செருப்பு போட முடியாது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் போடாத நிலை இங்கு இல்லை. எதைவைத்து அண்ணாமலை சொன்னார் என்று தெரியவில்லை. அண்ணாமலை உண்டியல் எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசிடம் போகட்டும். தமிழ்நாட்டுக்கு ரூ.2151 கோடி கலெக்ட் பண்ணனும். தமிழ்நாட்டு மக்களிடமே ஏன் வசூல் செய்ய வேண்டும். நாங்கதான் வசூல் பண்ணி கொடுத்து வச்சிருக்கோம். அதில் 29 பைசாதான் கொடுக்கிறீங்க.
ஒன்றிய அரசிடம் பணம் வாங்கி தாங்க. நீங்க பணம் தராம இருந்துகிட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுக்காதீங்க. விதண்டாவாதமாக பேசாதீங்க. பள்ளிக்கல்வித்துறையில் நிறைய திட்டங்கள் கொண்டு வருகிறோம். அதனால்தான் அண்ணாமலை பள்ளிக்கல்வித்துறையை டார்கெட் செய்கிறார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கும் எனக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நான் கேட்பேன். அவரும் என்னை கேட்பார். வெளியூர் சென்றால் சொல்லிவிட்டுதான் செல்வேன். எதற்கு இப்படி திரித்துவிட்டு வேலை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. வேலையில்லாமல் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு சிரிப்புதான் வருகிறது. இன்றைய வரைக்கும் தொகுதியில் ஏதேனும் நிகழ்ச்சி நடத்தினால் அவரிடம் சொல்வேன். கலைஞர் நிகழ்ச்சியை கூட அவர்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அதேபோல் அவர்தான் ஆரம்பித்தார். கடைசி நிகழ்ச்சியில் கூட அண்ணன் நேரு பேசும்போது இத்தனை அமைச்சர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. தம்பி நடத்தியுள்ளார் என்று பெருமையாக பேசினார். இதுபோன்று ஒவ்வொரு இடத்திலேயும் அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் கொடுக்கக்கூடியவர் அமைச்சர் நேரு. யாரை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். 35 வருட அனுபவம் அவருக்கு. அவருடன் என்னை கம்பேர் செய்வதே தப்பு. நாங்க இப்ப இருக்கிற புள்ளைங்க. அவர் எங்களுக்கு சீனியர். ஈகோ எதுவும் கிடையாது. அதெல்லாம் புரளி.
உதயநிதிக்கும் எனக்கும் பிளவா? அந்த கேள்வியே நீங்கள் கேட்க முடியாது. எங்களுடைய நட்பு எப்படி என்பது எனக்கு விளக்க தெரியவில்லை. நண்பர்கள் தினத்திற்கு கூட நாங்கள் வாழ்த்து சொல்லிக்கொள்ளமாட்டோம். அது எங்களுக்கு சிரிப்பா இருக்கும். 365 நாட்களும் எங்களுக்கு நண்பர்கள் தினம் தான். எங்களுக்கு இடையே பிளவு படுத்த முயற்சி செய்தார்கள் என்றால் அது வீண் வேலை என்றுதான் சொல்வேன்” எனத் தெரிவித்தார்.