Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Continues below advertisement

நடிகரும், தே.மு.தி.க.வின் தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

முதலாம் ஆண்டு நினைவு நாள்:

Continues below advertisement

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

விஜயகாந்தின் நினைவு நாளை குருபூஜையாக அனுசரிக்கப்படும் என்று தேமுதிக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் கோயில் போன்றும் மாற்றப்பட்டுள்ளது. நினைவிடம் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு காலையிலே தேமுதி தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர். 

அதிகாலையிலே ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்:

அதிகாலையிலே ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தே.மு.தி.க. தொண்டர்கள் மட்டுமின்றி கட்சி சாராத பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் அதிகாலை முதலே விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக தொண்டர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் மொட்டை அடித்தும் வருகின்றனர்.

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு உணவு வழங்க தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. நேற்று இரவு முதலே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்க தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. 

பேரணிக்கு அனுமதி மறுப்பு:

விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் மக்கள் எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க போலீசார் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளது.  

விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக முக்கிய தலைவர்களான சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் வர உள்ளனர். மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement