இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 28, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உதவுதலில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷப ராசி
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களைக் கவர்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மிதுன ராசி
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணம் கைகூடும். அடுத்தவர் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
கடக ராசி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை வாங்குவது குறித்த வாய்ப்புகள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். அரசுப் பணிகளால் ஆதாயம் உண்டாகும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.
தனுசு ராசி
மறைமுக எதிர்ப்புகள் மூலம் இழுபறிகள் தோன்றி மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
மகர ராசி
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். கவலை மறையும் நாள்.
கும்ப ராசி
மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிற்கல்வி சார்ந்த செயல்களில் உள்ள குழப்பங்கள் குறையும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.
மீன ராசி
உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.