மேலும் அறிய

Zelio Gracy EV Scooter: ரூ.59,999-க்கே ஒரு EV பைக் வாங்கலாம்.! மிடில் கிளாசுக்காகவே அதிரடியாக களமிறங்கிய Zelio Gracy

Zelio Gracy Price in India: ஸீலியோ கிரேஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் 59,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு வெவ்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக, பலர் மின்சார ஸ்கூட்டர்களை வாங்க விரும்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஸீலியோ கிரேஸி மின்சார ஸ்கூட்டர், அதிநவீன அம்சங்களுடன் சாமானிய மக்கள் வாங்கக்கூடிய விலையில் சந்தைக்கு வந்துள்ளது. இது குறைந்த செலவில் உள்ளூர் பயணங்களுக்கு கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸீலியோ கிரேசி வேரியண்ட்டுகள் மற்றும் விலை

Zelio Gracy மொத்தம் 4 வகைகளில் கிடைக்கிறது. பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப லெட்-ஆசிட் அல்லது லித்தியம்-அயன் பேட்டரி விருப்பங்களை தேர்ந்தெடுக்கலாம். 

கிரேஸி லெட் ஆசிட் பைக்கின் 60V 32AH மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 59,999 ரூபாய் ஆகும். மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும். கிரேஸி லெட் ஆசிட் பைக்கின் 72V 32AH மாடலின் விலை 62,499 ரூபாய் ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும்.

கிரேஸி லித்தியம்-அயன் 60V 32AH மாடலின் விலை 72,999 ரூபாய் ஆகும். இது ஒரு லித்தியம் பேட்டரி என்பதால், இதை வெறும் 4 முதல் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். 72V 32AH மாடல் ஒன்றும் உள்ளது. இது உயர் ரக மாடல் ஆகும். இதன் விலை 76,999 ரூபாய். இதையும் முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆகும்.

கிரேஸியின் அம்சங்கள் என்னென்ன.?

ஸீலியோ கிரேஸி பைக், சக்திவாய்ந்த BLFC ஹப் மோட்டாரை பயன்படுத்துகிறது. இது அதிக சத்தம் எழுப்பாமல் இயங்குகிறது. இதன் பேட்டரி திறன் 1.92 kWh ஆகும். இது, மாடலை பொறுத்து மாறுபடும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பயணம் செய்யும்போது பைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதில் டியூப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டாக்கோமீட்டர் மற்றும் கடிகாரம் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் உள்ளன. சாவியின் தேவையின்றி ஸ்கூட்டரை இயக்கும் வசதி உள்ளது. ஸ்கூட்டரை எளிதாக இயக்க புஷ் பட்டன் வசதி உள்ளது. பயணத்தின்போது மொபைல் போன்களை சார்ஜ் செய்ய ஒரு USB போர்ட்டும் உள்ளது. ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன் சிக்னல் விளக்குகள் அனைத்தும் LED வகையைச் சேர்ந்தவை. இவை குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக ஒளியை வழங்குகின்றன. பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும்போது பயனரை எச்சரிக்கும் அமைப்பும் உள்ளது.

இதன் சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட சஸ்பென்ஷனும் உள்ளன. இது குண்டும் குழியுமான சாலைகளில்கூட ஸ்கூட்டரைச் சீராகச் செல்ல வைக்கிறது. 

வடிவமைப்பு

இந்த ஸ்கூட்டர் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது தற்போது வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. பயணிகளின் வசதிக்காக, இதில் ஒற்றை இருக்கை, முதுகு சாய்வு இருக்கை மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கான கால் வைக்கும் இடம் ஆகியவை உள்ளன. மேலும், சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்காக இருக்கையின் கீழ் பொருட்களை வைப்பதற்கான இடமும் உள்ளது.

எந்த பைக்குடன் போட்டி.?

Zelio Gracy, சந்தையில் உள்ள பல பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது. இதன் முதன்மைப் போட்டியாளர் Ola S1Z ஆகும். அந்த பைக்கின் விலையும் சுமார் 60,000 ரூபாய் ஆகும். இரண்டாவது பைக் Kinetic Green E Luna ஆகும். இது 70,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது. மேலும், Hero Electric Flash பைக்கும் 60,000 ரூபாய் விலையில் வருகிறது. இதுவும் Zelio Gracy-ஐ போன்றே அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

 

 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget