மேலும் அறிய

Yamaha EC-06 Review: ஸ்டைல், வடிவமைப்பு, செயல்திறன்; யமாஹா EC-06 மின்சார ஸ்கூட்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்

Yamaha EC-06 Electric Scooter Review: ரிவர் நிறுவனத்துடன் இணைந்து இன்டி மின்சார ஸ்கூட்டரைத் தழுவி யமாஹா EC-06 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ஸ்டைல், வடிவமைப்பு மற்றும் செயல்திறனில் அந்த ஸ்கூட்டர் எப்படி உள்ளது.? பார்க்கலாம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையில், டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய நிலையில், நீண்ட அமைதிக்குப்பின், ரிவர் நிறுவனத்துடன் இணைந்து, EC-06 என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது புகழ்பெற்ற யமாஹா நிறுவனம். சட்டென்று பார்ப்பதற்கு ரிவர் இண்டி போலவே தோற்றமளிக்கு இந்த இவி ஸ்கூட்டரின் வடிவமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, செயல்திறனில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஸ்டைல் மற்றும் வடிவமைப்பு எப்படி இருக்கிறது.?

ஸ்டைல் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தவரை, யமஹா நிறுவனம் தனது EC-06 மின்சார ஸ்கூட்டரை, ரிவர் இண்டியிலிருந்து மிகவும் சிறப்பாக வேறுபடுத்தியுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மிக நேர்த்தியாகவும், அதே சமயத்தில் உறுதியானதாகவும், ஸ்கூட்டர் பிரியர்களை கவரும் விதமாகவும் இருக்கிறது.

யமஹா, இந் EC-06 மாடலில், இண்டியில் இருக்கும் பக்கவாட்டு கிராஷ் கார்டு மற்றும் பேனியர் மவுண்ட்கள் போன்ற கூடுதல் பாகங்களை நீக்கி இருக்கிறது. அதனால், இது 132 கிலோ எடையுடன், இண்டியை விட சுமார் 8 கிலோ எடை குறைவாக உள்ளது. மேலும், இந்த நீக்கத்தின் விளைவாக, EC-06 பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது மிகவும் ஸ்டைலிஷாக தெரிகிறது.

பரிமாணங்களை பொறுத்தவரை, இந்த இவி ஸ்கூட்டர் 1,995 நீளம், 765 அகலம் மற்றும் 1,153 மிமீ உயரமும், 1,354 மிமீ வீல்பேஸையும் கொண்டுள்ளது. மேலும், அகலமான இந்த ஸ்கூட்டர், சாலையில் மிகவும் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

கட்டமைப்பின் தரம் எப்படி உள்ளது.?

மொத்தமாக இதன் கட்டமைப்புத் தரத்தை பார்க்கும்போது, யமஹா EC-06 மிகவும் உறுதியாக உள்ளது. அதிக வேகத்தில் சில மோசமான சாலைகளில் பயணிக்கும்போதும், எந்தவித சப்தத்தையும் வாகனம் எழுப்பவில்லை. அதாவது, பேனல்களிலிருந்தோ, சார்ஜிங் போர்ட் மூடியிலிருந்தோ எந்தவித கீச்சொலியும் எழவில்லை.

டயர்கள் மற்றும் பிரேக்கிங் எப்படி இருக்கிறது.?

யமாஹா EC-06 மின்சார ஸ்கூட்டரில், பெரிய 14 அங்குல சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 110-செக்ஷன் டயர்களும், பின்புறத்தில் 120-செக்ஷன் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அகலமான டயர்கள் நெடுஞ்சாலையில் நல்ல வேகத்தில் பயணிக்க நம்பிக்கையை அளிக்கின்றன. மேலும், வளைவுகளில் பிடிப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.

பிரேக்கிங்கை பொறுத்தவரை, கடுமையாக பிரேக் பிடிக்கும்போதும் கூட, டயர்கள் அவ்வளவு எளிதில் லாக் ஆவதில்லை. இதனால், பயமின்றி நல்ல வேகத்தில் பயணிக்க முடிகிறது. இந்த டயர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட காற்று அளவை குறிக்கும் ஸ்டிக்கர் இருக்கைக்கு அடியில் ஒட்டப்பட்டுள்ளது.

அம்சங்களில் எப்படி.?

அம்சங்களை பொறுத்தவரை, யமஹா EC-06-ல், யமஹா R-Connect செயலி வழியாக இணைப்பு வசதியுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஈகோ, ஸ்டாண்டர்ட், பவர் என 3 ரைடு மோட்கள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் முழுமையான LED விளக்குகள் ஆகியவை அடங்கும். அதோடு, ஸ்கூட்டரை முன்னும் பின்னுமாக நகர்த்துவதற்கு பார்க் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. 

முகப்பு விளக்கு, இண்டிகேட்டர் மற்றும் ஹார்ன் சுவிட்ச் இடதுபுறத்தில் அமைந்துள்ளன. பார்க் மோட், என்ஜின் கில் மற்றும் ரைடு மோட் சுவிட்ச் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் திரையில் தேவையான அனைத்து தகவல்களும் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள பெரிய எழுத்துருக்கள் தகவல்களை பார்ப்பதை எளிதாக்குகிறது.

அடுக்கப்பட்ட செவ்வக முகப்பு விளக்கு, ரிஃப்ளக்டர் அடிப்படையிலான LED அமைப்பை பயன்படுத்துகிறது.  மேலும், நேர்த்தியான பின்புற LED விளக்கு, இண்டிகேட்டர்களும் முழுவதுமாக LED-யில் கொடுக்கப்பட்டுள்ளன.


Yamaha EC-06 Review: ஸ்டைல், வடிவமைப்பு, செயல்திறன்; யமாஹா EC-06 மின்சார ஸ்கூட்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்

இதன் ஒற்றை இருக்கை, ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்பவர் இருவருக்கும் வசதியாக அகலமாகவும், அமர்வதற்கு நல்ல வசதியாகவும் உள்ளது. அதன் மெத்தை சற்று மென்மையாக இருப்பது சௌகரியத்தை மேலும் கூட்டுகிறது. பின்னால் அமர்பவர் பிடித்துக் கொள்வதற்காக, ஒரு பெரிய உறுதியான கைப்பிடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு இடம்

யமாஹா, இந்த EC-06-ன் சேமிப்பு இடத்தை குறைத்துள்ளது. இண்டி ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பு இடம் 43 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இதில் அந்த இடம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதால் 24.5 லிட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு ஹெல்மெட்டை வைத்த பின், பெரிய அளவில் இடம் மீதம் இல்லை. மேலும், தளம் சரிவாகவும், ஆழமும் குறைவாகவே உள்ளது.

இண்டியில் உள்ளது போல், இந்த மாடலில் கிளவ் பாக்ஸ் இல்லை. எனினும், 3 கிலோ வரை எடை தாங்கும் ஒரு பை கொக்கி உள்ளது. அதோடு, பெரிய பைகளை வைத்துக்கொள்ளும் அளவிற்கு தரைப்பலகையில் இடவசதி நன்றாகவே உள்ளது.

பேட்டரி, சார்ஜிங் மற்றும் ரேஞ்ச்

இந்த EC-06 ஸ்கூட்டரில், 4kWh NMC பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ருடன் வழங்கப்படும் கையடக்க சார்ஜருடன் ஒரே ஒரு சார்ஜிங் வசதி மட்டுமே உள்ளது. 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8 மணி நேரமும், 100 சதவிதம் வரை சார்ஜ் செய்ய மேலும் சில மணி நேரங்களும் ஆகும். ஒரு ஸ்கூட்டருக்கு இந்த சார்ஜிங் நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. தற்போது இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இல்லை. ரேஞ்சை பொறுத்தவரை, இண்டியை விட இது சுமார் 8 கிலோ எடை குறைவாக இருப்பதால், சற்று அதிகமான ரேஞ்சை வழங்கும். இதில் ரீஜென் அம்சமும் உள்ளது. நீங்கள் த்ராட்டிலை மூடும்போது, பேட்டரி சார்ஜ் ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏபிபி-யின் பார்வை

நிறைகள்

  • நேர்த்தியான, உறுதியான வடிவமைப்பு பரந்த பார்வையாளர்களைக் கவரும்.
  • 9 bhp மோட்டாரின் பவர் மோட் செயல்திறன் சிறப்பாக உள்ளது. மேலும், மணிக்கு சுமார் 90 கிமீ உச்ச வேகத்தை எட்டுகிறது.
  • அதிவேகத்தில் சிறந்த நிலைத்தன்மை மற்றும் வளைவுகளில் ஓட்டுவதற்கு மிகவும் Fun-ஆக உள்ளது.
  • உறுதியான சஸ்பென்ஷன், பெரிய 14-இன்ச் சக்கரங்கள், வேகத்தை குறைக்காமல் மேடு பள்ளங்களில் நம்பிக்கையுடன் பயணிக்க உதவுகின்றன.
  • அகலமான இருக்கை மற்றும் போதுமான கால் இடவசதி, உயரமானவர்களுக்கும் வசதியான பயணத்தை வழங்குகிறது.
  • அதன் அளவு மற்றும் எடைக்கு, ஆச்சரியமூட்டும் வகையில் சுறுசுறுப்பாக உள்ளது. மேலும், குறைந்த வேகத்தில் கையாளுவதற்கு எளிதாக உள்ளது.

குறைகள்

  • இதன் ப்ரீமியம் விலையை கருத்தில் கொண்டால், போட்டியாளர்களைவிட அம்சங்களில் பின்தங்கியுள்ளது. LED திரை பிரகாசமாக இல்லை.
  • மிக நீண்ட சார்ஜிங் நேரம் (100%-க்கு 10 மணி நேரம்) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை.
  • இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் கொள்ளளவு குறைவாக உள்ளது. முன்புறம் கிளவ் பாக்ஸ் போன்ற கூடுதல் ஸ்டோரேஜ் இல்லை.
  • ஃபோன் பேரிங்(Pairing) (இசை, அழைப்புகள்), டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் இதில் இல்லை. மேலும், மிகவும் சாதாரணமான MID டிஸ்ப்ளே உள்ளது.
  • EC-06 ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.

 

 

தலைப்பு செய்திகள்

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget