மேலும் அறிய

Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?

Vinfast VF MPV7 Price: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் மின்சார கார் மாடலான VF MPV 7, 24 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Vinfast VF MPV 7: வின்ஃபாஸ்டின் VF MPV 7 கார் மாடலானது இந்திய சந்தையில் காரென்ஸ் க்ளாவிஸ் மற்றும் BYD eMax7 ஆகிய கார் மாடல்களுடன் மோத உள்ளது.

வின்ஃபாஸ்டின் 7 சீட்டர் எம்பிவி அறிமுகம்

இந்திய சந்தைக்கான தங்களது மூன்றாவது காராக VF MPV 7 மாடலை, வின்ஃபாஸ்ட் நிறுவனம் உள்ளூரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.  முன்னதாக VF6 மற்றும் VF7 என இரண்டு மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ப்ராண்டின் மூன்றாவது மின்சார கார் மற்றும் முதல் 7 சீட்டர் எம்பிவி ஆக அறிகப்படுத்தப்பட்டுள்ள எம்பிவியின் விலை 24 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது கியா காரென்ஸ் க்ளாவிஸ், மஹிந்த்ராவின் XEV 95 மற்றும் BYD eMax7 ஆகிய கார் மாடல்களுடன் மோதுகிறது. இந்த மின்சார எம்பிவி ஆனது வாடகை கார் பயன்பாட்டிற்கு வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

VF MPV 7 - வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

VF MPV 7 மாடலுக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனமானது பலதரப்பட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.  இன்ஜின் அடிப்படையிலான கார் பயன்பாட்டிலிருந்து மின்சார வாகனத்திற்கு மாறும் பயனர்களுக்கு ரூ.2 லட்சம் சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு வாரண்டி, எக்ஸ்-ஷோரூம் விலையில் 75 சதவிகிதத்திகு பைபேக் திட்டம், 2029ம் ஆண்டு வரை இலவசமான சார்ஜிங் ஆகிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் வின்ஃபாட் நிறுவனத்திற்கான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 75 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?

VF MPV 7 - பவர்ட்ரெயின் விவரங்கள்

வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டரானது 60.13KWh பேட்டரி பேக்கை கொண்டு 517 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட மோட்டாரை கொண்டு 204hp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 9 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ட்ரைவிங் மோட்கள் கிடைக்கின்றன. ப்ரேக் ரிஜெனரேஷன் மோடும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 80KW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 முதல் 70 சதவிகிதம் சார்ஜானது வெறும் 30 நிமிடங்களில் எட்டும் என கூறப்படுகிறது.

VF MPV 7 - முக்கிய அம்சங்கள்

VF6 மற்றும் VF7 மாடல்களை போன்றே வின்ஃபாஸ்டின் புதிய VF MPV 7 மாடலும், ப்ரீமியம் கேபின் அனுபவத்தை வழங்குகிறது. அதன்படி, 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஃபங்க்சனாலிட்டிக்காக ஒரு ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, ஃப்ளோட்டிங் செண்டர் கன்சோல், USB டைப்-A மற்றும் டைப்-C போர்ட்கள், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்டியரிங் மவுண்ட் கன்ட்ரோல்ஸ், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?

பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், சென்சார்களுடன் கூடிய ரியர் பார்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், EBD உடன் கூடிய ஆண்டி -லாக்கிங் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேநேரம், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ADAS போன்ற பிரதான போட்டியாளர்களிடம் உள்ள அம்சங்கள் VF MPV 7 மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VF MPV 7 - கவனத்தை ஈர்க்கும் டிசைன்

VF6 மற்றும் VF7 இருப்பதை போன்ற வின்ஃபாஸ்டின் தனித்துவமான டிசைன் டச் VF MPV 7 கார் மாடலிலும் உள்ளது. அதன்படி இந்த மின்சார எம்பிவியில், வெர்டிகலில் ஓரியண்டட் முகப்பு விளக்குகள், முன் மற்றும் பின் பக்கங்களில் எல்இடி லைட் பார்கள், ப்ளாக் லோவர் - பாடி க்ளாடிங், க்ரோம் கார்னிஷ்ட்  விண்டோ லைன், வழக்கமான புல்-டைப்  டோர் ஹேண்டில்கள், ஏரோ ஆப்டிமைஸ்ட் அலாய் வீல்கள், வ்ராப்ரவுண்ட் டெயில் லேம்ப்ஸ் ஆகியவை வெளிப்புற கவனத்தை ஈர்க்கின்றன. அளவீடுகள் அடிப்படையில் 4 ஆயிரத்து 740 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 872 மில்லி மீட்டர் அகலம் மற்றும் ஆயிரத்து 734 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2 ஆயிரத்து 840 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்டுள்ளது. 126 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா Avore EX1 இ பைக்? விலை எவ்ளோ மச்சி?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா Avore EX1 இ பைக்? விலை எவ்ளோ மச்சி?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?

Embed widget