பெட்ரோல் விக்குற விலைக்கு பெஸ்ட் பைக் இதுதான்... 80 கி.மீட்டர் மைலேஜ் மாமே! டிவிஎஸ்-ன் எந்த பைக்?
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான டிவிஎஸ் Sport பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று TVS Sport.
TVS Sport:
நல்ல மைலேஜ் தரும் இந்த புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் பற்றி கீழே விரிவாக காணலாம்.
1. Sport ES - ரூபாய் 83 ஆயிரத்து 670
2. Sport ES+ - ரூபாய் 84 ஆயிரத்து 789
110 சிசி எஞ்ஜின்:
இந்த TVS Sport இரு சக்கர வாகனத்தில் 109.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த TVS Sport பைக்கின் எடை 112 கிலோ ஆகும். இந்த இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கரில் 10 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது.
80 கி.மீட்டர் மைலேஜ்:
மைலேஜ் அரசனாக கருதப்படும் இந்த TVS Sport பைக்கிற்கு 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 800 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். இந்த TVS Sport பைக் நீலம், சிவப்பு, கருப்பு, சாம்பல் உள்ளிட்ட 10 வண்ணங்களில் உள்ளது.
அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இரு சக்கர வாகனத்தில் பயணிக்கலாம். 8.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 8.08 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 4 கியர்கள் உள்ளது. பிஎஸ்6 பாஸ்2 எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது.
சிறப்புகள்:
எஸ்பிடி ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
டெலிஸ்கோபிக் ஆயில் டேம்ப்ட் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்கரில் 2 லிட்டர் பெட்ரோல் வசதி உள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது.
வசதிகள்:
இன்ஸ்ட்ரூமென்ட் அனலோக் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் அனலோக் வசதி உள்ளது. லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















