மேலும் அறிய

TVS Jupiter Vs Honda Activa: டிவிஎஸ் ஜூபிடரா.? ஹோண்டா ஆக்டிவா-வா.?; மைலேஜ், விலை, அம்சங்கள் அடிப்படையில் எது பெஸ்ட்.?

டிவிஎஸ் ஜுபிடர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா இரண்டுமே பிரபலமான ஸ்கூட்டர்கள். இவை இரண்டில் எதை வாங்குவது என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால், இதில் எது சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்திய சந்தையில் இருசக்கர வாகனப் பிரிவு பற்றி பேசும் போது, டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹோண்டா ஆக்டிவாவை எப்படி தவிர்க்க முடியும்.? இந்த இரண்டு பைக்குகளும் சந்தையில் அதிக தேவை உள்ள இருசக்கர வாகனங்கள். ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஒரே விலை வரம்பில் வருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், இரண்டு ஸ்கூட்டர்களையும் 75,000 ரூபாய் தொடக்க விலையில் வாங்கலாம். இரண்டு ஸ்கூட்டர்களின் விலைகள், மைலேஜ் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

TVS Jupiter

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் நான்கு வகைகளில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன், ஸ்மார்ட் சோனெக்ட் டிஸ்க், ஸ்மார்ட் சோனெக்ட் டிரம் மற்றும் டிரம் அலாய். இது 7 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சென்னையில் டிவிஎஸ் ஜூபிடரின் எக்ஸ்-ஷோரூம் விலை 78,250 ரூபாயில் தொடங்குகிறது. இதன் டாப் வேரியன்ட்டின் விலை 91,050 ரூபாய் வரை செல்கிறது. இதேபோல், ஆன் ரோடு விலை 94,574 ரூபாயில் தொடங்கி, டாப் வேரியன்ட்டிற்கு 1,10,399 ரூபாய் வரை செல்கிறது.

இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரில் 6,500 ஆர்பிஎம்-மில் 5.9 கிலோவாட் பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.2 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 54 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர், இரண்டு ஹெல்மெட்களை வைத்திருக்க போதுமான இடத்தை வழங்குகிறது. ஸ்டைலிங் டெயில்லைட் பார் கொண்டுள்ளது. இந்த இருசக்கர வாகனம் பாதுகாப்பு முக்கிய கவனம் செலுத்துகிறது. சிலர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் சைடு ஸ்டாண்டை அகற்ற மறந்து விடுகிறார்கள். இதை நிவர்த்தி செய்ய, ஸ்கூட்டரில் சைடுஸ்டாண்ட் இண்டிகேட்டர் உள்ளது.

Honda Activa

ஹோண்டா ஆக்டிவா மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட், டிஎல்எக்ஸ் மற்றும் ஸ்மார்ட். ஸ்டாண்டர்ட் மாடலில் ஹாலஜன் ஹெட்லேம்ப் உள்ளது. அதே நேரத்தில், டிஎல்எக்ஸ் மற்றும் ஸ்மார்ட் மாடல்களில் எல்இடி ஹெட்லேம்ப்புகள் உள்ளன. ஸ்மார்ட் வேரியண்டில் மட்டுமே புளூடூத் இணைப்பு மற்றும் மேப் வழங்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவாவின் Standard மாடலின் விலை 79,378 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்). இதில் டாப் வேரியன்ட்டான ஸ்மார்ட் மாடலின் விலை 92,834 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்). இந்த ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை 97,000 ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த விலையில் RTO மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அடங்கும்.  ஹோண்டா ஆக்டிவா 4-ஸ்ட்ரோக், SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா லிட்டருக்கு கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் ஒப்பிடும் போது, விலை ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே உள்ளது. ஹோண்டா ஆக்டிவாவின் விலை சிறிய அளவில் அதிகமாக உள்ளது. ஆனால், மைலேஜை பார்க்கும்போது, இது ஜுபிடரை விட அதிகமாகவே உள்ளது. எனினும், ஒரு ஸ்டைலான அதிக இட வசதி கொண்ட ஒரு ஸ்கூட்டரை விரும்புபவர்கள் ஜுபிடரை தேர்வு செய்யலாம். நல்ல அம்சங்கள் மற்றும் மைலேஜுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் ஆக்டிவாவை தேர்வு செய்யலாம்.

தலைப்பு செய்திகள்

Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget