மேலும் அறிய

Maruti Suzuki Hybrid: புதுசா 5 & 7 சீட்டரை ஹைப்ரிட் மாடல்களாக மாற்றும் மாருதி சுசூகி..! பட்ஜெட்டில் எப்படி? மைலேஜ், வசதி

Maruti Suzuki Hybrid: மாருதி சுசூகி நிறுவனம் 5 மற்றும் 7 சீட்டர் கார் மாடலில், ஹைப்ரிட் எடிஷன்களை சந்தைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

Maruti Suzuki Hybrid: மாருதி சுசூகி விரைவில் அறிமுகப்படுத்த உள்ள 5 மற்றும் 7 சீட்டர் ஹைப்ரிட் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதியின் புதிய ஹைப்ரிட்கள்:

மாருதி சுசூகி நிறுவனம் தனது க்ராண்ட் விட்டாரா, விக்டோரிஸ் மற்றும் இன்விக்டோ கார் மாடல்கள் மூலமாக, இந்தியாவின் ஹைப்ரிட் வாகன சந்தை பிரிவில் 19 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, இந்த பிரிவில் தனது இருப்பிடத்தை மேலும் வலுப்படுத்த இந்த ஜப்பான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயின் மூலமாக, தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது. HEV என்ற கோட்நேமை கொண்டுள்ள மாருதியின் இந்த புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பமானது, டொயோட்டாவின் சீரிஸ் பாரெல்லல் ஹைப்ரிட் சிஸ்டத்தை காட்டிலும் அதிக எரிபொருள் திறன் கொண்டிருப்பதோடு குறைந்த  செலவிலானது எனவும் கூறப்படுகிறது. 

விரைவில் வெளியாக உள்ள மாருதி ஃப்ராங்க்ஸ் ஃபேஸ்லிஃப்டானது ப்ராண்டின் புதிய ஹைப்ரிட் பவர்ட்ரெயினை பயன்படுத்தும் முதல் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து பல வெகுஜன சந்தைக்கான மாடல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேநேரம், தனது பெரிய ப்ரீமியம் மாடல்களில் தொடர்ந்து டொயோட்டாவின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மாருதி முடிவு செய்துள்ளது.

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி 

நடப்பாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஒரு பிரீமியம் மூன்று-வரிசை இருக்கை எஸ்யுவி உட்பட இரண்டு புதிய ஹைப்ரிட் கார்களை சந்தைப்படுத்த உள்ளது.  Y17 என்ற கோட்நேமை கொண்டுள்ள மாருதியின் 7 சீட்டர் எஸ்யுவியானது, க்ராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும், கூடுதல் இருக்கை வரிசைக்காக நீண்ட வீல்பேஸைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்த எஸ்யுவியானது கிராண்ட் விட்டாராவுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என்றும், அதே சமயம் பம்பர் வடிவமைப்பு மற்றும் லைட்டிங் அம்சங்களை இ-விட்டாராவிலிருந்து கடனாக வாங்கியிருக்கும் என்ற உணர்வுகளை தருகிறது.

குளோபல் சி ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட புதிய 7 சீட்டரானது, க்ராண்ட் விட்டாராவின் 104bhp, 1.5L நட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 116bhp, 1.5L பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இரண்டும் வழங்கப்படும், அதே நேரத்தில் AWD (ஆல்-வீல் டிரைவ்) சிஸ்டமும் தொடரும். நடப்பாண்டின் இறுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை 18 லட்சத்தில் தொடங்கி 23 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடுமாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், மஹிந்த்ரா XUV 700, டாடா சஃபாரி மற்றும் ரெனால்ட் டஸ்டர் 7 சீட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது.

இதையும் படியுங்கள்: Tata EV SUV: 500+ KM ரேஞ்ச் உள்ளூர் எஸ்யுவி..! ஜுன் 30ம் தேதி ஹுண்டாய், மஹிந்த்ராவிற்கு ஆப்பு - விலை, அம்சங்கள்

மாருதியின் புதிய 5 சீட்டர் எஸ்யுவி

புதிய 2026 மாருதி க்ராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது நுட்பமான டிசைன் மாற்றங்களையும், பல்வேறு அம்சங்களின் அப்க்ரேட்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இன்ஜின் அடிப்படையில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ள வாய்ப்பில்லையாம். கூடுதலாக புதிய ஹைப்ரிட் ஆப்ஷன் மட்டும் சேர்க்கப்பட உள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில், சற்றே மாற்றியமைக்கப்பட்ட க்ரில், மறுவடிவமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி விளக்குகள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் இடம்பெறலாம். உட்புறத்தில், புதிய மாருதி க்ராண்ட் விட்டாரா 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லெவல்-2 ADAS சூட் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget