மேலும் அறிய

Tata vs Mahindra SUV: டாடா vs மஹிந்திரா: எந்த எஸ்யுவி பெஸ்ட்? டிசைன், சேஃப்டி, அம்சங்கள்- ஓர் ஒப்பீடு!

Tata vs Mahindra SUV Comparison: டாடாவா மஹிந்திராவா? எந்த நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் அதிக சக்தி வாய்ந்தவை? வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் உள்ள வேறுபாடுகள் இதோ!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரு உள்நாட்டு நிறுவனங்களுக்கு இடையேதான் எப்போதுமே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் எஸ்யூவி சிறந்தது, எது அதிக சக்தி வாய்ந்தது? இரண்டுக்கும் உள்ள வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் இன்ஜின் திறன்களில் உள்ள வேறுபாடுகளை இங்கே விரிவாகக் காண்போம்.

வடிவமைப்பு ஒப்பீடு

  • டாடா மோட்டார்ஸ்: டாடா நிறுவனத்தின் நெக்ஸான், ஹாரியர், சஃபாரி ஆகிய எஸ்யூவிக்கள் அவற்றின் நவீன மற்றும் வசதியான தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பிரீமியம் தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. ஏரோடைனமிக் டிசைன், ஷார்ப்பான எல்இடி டிஆர்எல்கள், வளைவான வடிவமைப்புகள் என பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்படி டாடா தனது கார்களை வடிவமைக்கிறது.
  • மஹிந்திரா: அதேநேரம் தார், ஸ்கார்பியோ-என், XUV700 என மஹிந்திரா எஸ்யூவிக்கள் அவற்றின் முரட்டுத்தனமான, பவர்ஃபுல்லான வடிவமைப்பு மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. இவை சாலையில் செல்லும்போது கார்களுக்கு கம்பீரமான தோற்றத்தை தருகின்றன.

இன்ஜின், பவர் எப்படி?

எந்த கார் அதிக சக்தி வாய்ந்தது என்ற கேள்வி வரும்போது, மஹிந்திரா நிறுவனம் சற்றே முந்திக்கொள்கிறது.

  • மஹிந்திராவின் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்கள் அதிக ஆற்றலையும் சிறப்பான டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவை. மேலும், ஆஃப்ரோடிங் சாகசங்களுக்கு ஏற்ற வசதிகள் மஹிந்திராவின் பல மாடல்களில் கிடைக்கின்றன.
  • டாடா கார்களும் சக்திவாய்ந்த இன்ஜின்களைக் கொண்டுள்ளன. எனினும் மஹிந்திராவைக் காட்டிலும் சற்றே குறைவுதான்.

சிறப்பு அம்சங்கள், தொழில்நுட்பம் எப்படி?

  • டாடா: பிரீமியம் லெதர் இன்டீரியர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மற்றும் மேம்பட்ட ADAS தொழில்நுட்பம் ஆகியவற்றில் டாடா அதிக கவனம் செலுத்துகிறது.
  • மஹிந்திரா: மஹிந்திராவும் XUV700 போன்ற மாடல்களில் டூயல் ஸ்கிரீன் செட்டப், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS லெவல் 2 அம்சங்களை வழங்குகிறது. ஆனால், டாடாவோடு ஒப்பிடுகையில் மஹிந்திரா கார்களின் இன்டீரியர் சற்று கரடுமுரடான பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tata vs Mahindra SUV: டாடா vs மஹிந்திரா: எந்த எஸ்யுவி பெஸ்ட்? டிசைன், சேஃப்டி, அம்சங்கள்- ஓர் ஒப்பீடு!

பாதுகாப்பு

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியர்களின் நம்பிக்கையை இரண்டு நிறுவனங்களுமே முழுமையாகப் பெற்றுள்ளன. இரண்டு நிறுவனங்களின் பெரும்பாலான எஸ்யூவி கார்களும் குளோபல் என்கேப் மற்றும் பாரத் என்கேப் சோதனைகளில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று பாதுகாப்பில் சமநிலையில் உள்ளன.

மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட்டில் டாடா கார்களே, மஹிந்திராவைவிடவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

எதை வாங்கலாம்?

நீங்கள் நவீனமான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு, சிறந்த இன்டீரியர், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தை விரும்பினால் டாடா எஸ்யூவிக்களை தேர்வு செய்யலாம்.

ஒருவேளை நீங்கள் கரடுமுரடான மலைச் சாலைகளிலும் பயணிக்கக்கூடிய திறன், அதிரடியான இன்ஜின் பவர் மற்றும் பார்த்தவுடனே மிரள வைக்கும் கம்பீரமான கார் வேண்டும் என்று நினைத்தால், மஹிந்திரா எஸ்யூவிக்கள் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Legender or Fortuner: டொயோட்டா ஃபார்ச்சூனர் vs லெஜண்டர்: எந்த கார் சிறந்த தேர்வு?
Legender or Fortuner: டொயோட்டா ஃபார்ச்சூனர் vs லெஜண்டர்: எந்த கார் சிறந்த தேர்வு?
மஹிந்திரா தார் Vs ராக்ஸ்: ஆஃப் ரோடிங், குடும்பப் பயணம், மைலேஜ், விலை- எது சிறந்தது?
மஹிந்திரா தார் Vs ராக்ஸ்: ஆஃப் ரோடிங், குடும்பப் பயணம், மைலேஜ், விலை- எது சிறந்தது?
புதிய மஹிந்திரா OG தார்: EMI, முன்பணம்- உங்கள் கனவு எஸ்யூவியை சொந்தமாக்குவது எப்படி?
புதிய மஹிந்திரா OG தார்: EMI, முன்பணம்- உங்கள் கனவு எஸ்யூவியை சொந்தமாக்குவது எப்படி?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget