மேலும் அறிய

Tata Tiago Cars: ₹4.69 லட்சத்தில் 4-ஸ்டார் பாதுகாப்பு! நடுத்தர வர்க்கத்தினருக்கு செம்ம ஆப்ஷன் - புதிய டாடா டியாகோ கார்கள்

பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோ மற்றும் அதன் எலக்ட்ரிக் பதிப்பான டியாகோ இவி ஆகியவற்றின் புதிய 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய பயணிகள் வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோ மற்றும் அதன் எலக்ட்ரிக் பதிப்பான டியாகோ இவி ஆகியவற்றின் புதிய 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

டாடா டியாகோ மற்றும் டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட்:

புதிய மேம்படுத்தப்பட்ட டாடா டியாகோ பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ₹4.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் பியூர் எலக்ட்ரிக் மாடலின் ஆரம்ப விலை ₹6.99 லட்சமாக உள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக டாடா நிறுவனம் இதில் பேட்டரி வாடகைத் திட்டத்தை (BaaS - Battery as a Service) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டியாகோ இவி காரை வெறும் ₹4.69 லட்சத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இதற்கு பேட்டரி வாடகையாக ஒரு கிலோமீட்டருக்கு ₹2.6 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் ஐசிஎன்ஜி மாடல் ₹5.79 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இந்த புதிய மாடல்கள் சந்தையில் இருக்கும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஆகிய கார்களுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூர்மையான தோற்றமும் புதிய எல்இடி ஹெட்லேம்ப்களும்

வடிவமைப்பைப் பொறுத்தவரை, 2026 டாடா டியாகோ பல முக்கிய மாற்றங்களுடன் முற்றிலும் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது. காரின் முன்பக்கத்தில் புருவம் போன்ற (Eyebrow style) டிஆர்எல்களுடன் கூடிய புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு முன்பை விட மிகவும் கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது. இதன் நடுவில் உள்ள பிளாக் பேனல் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் காரின் அழகை மேலும் கூட்டுகின்றன.

காரின் பக்கவாட்டு அமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் புதுமையைப் புகுத்தியுள்ளன. காரின் பின்பக்கத்தில் செங்குத்து வரிகளுடன் கூடிய கனெக்டெட் ஸ்டைல் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் இடம்பெற்றுள்ளன. எலக்ட்ரிக் (EV) மாடலை பொறுத்தவரை, முன்பக்க பிளாக் பேனலுக்குப் பதிலாக பாடி-கலர் பேனல், காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் எலக்ட்ரிக் பேட்ஜிங் ஆகியவை கொடுக்கப்பட்டு தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன இன்டீரியர் மற்றும் சிஎன்ஜியில் முதல் முறை ஏஎம்டி வசதி

காரின் உட்புறத்தில் நுழைந்ததும் அதன் பிரீமியம் லுக் நம்மை ஈர்க்கிறது. டேஷ்போர்டு அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு, 10.25 இன்ச் அளவிலான மிதக்கும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான பிரத்யேக டிஜிட்டல் டிஸ்ப்ளே பேனல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் காருக்குள் ஒரு சொகுசு காரின் உணர்வைத் தருகிறது. வசதிகளைப் பொறுத்தவரை டூயல் வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், பின்சீட் பயணிகளுக்கான ஏசி வென்ட்கள் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்ற உயர்தர அம்சங்கள் இதில் நிறைந்துள்ளன.

பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை தரும் டாடா நிறுவனம், இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கியுள்ளது. மேலும், இந்த கார் ஜிஎன்சிஏபி (GNCAP) கிராஷ் டெஸ்ட்டில் 4-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று தனது நம்பகத்தன்மையை மீண்டும் நிரூபித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த செக்மென்ட்டிலேயே முதன்முறையாக சிஎன்ஜி காரில் 5-ஸ்பீடு ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷனை டாடா அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: கார் வாங்க போறீங்களா? ஜூன் 1 முதல் ஷாக் கொடுக்கப்போகும் ஹூண்டாய்.. முழு விவரம்!

பவர்ஃபுலான இன்ஜினும் மிரட்டும் பேட்டரி

இந்த புதிய மாடலிலும் 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை வெளிப்படுத்தும் அதே நம்பகமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் வரும் சிஎன்ஜி மாடல் 75 hp பவரை வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக டியாகோ இவி மாடல் 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் நிஜ உலகப் பயன்பாட்டில் (Real-world range) 205 கிமீ முதல் 215 கிமீ வரையிலும், எம்ஐடிசி (MIDC) சான்றிதழின்படி 285 கிமீ வரையிலும் மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் நேரத்தைக் குறைக்க இதில் 30 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வசதி உள்ளது. இதன் மூலம் வெறும் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 100 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான ரேஞ்சை இந்த கார் பெற்றுவிடும் என்பது கூடுதல் சிறப்பு.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget