Duster Vs Victoris: ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
Duster Vs Victoris Hybrid: ரெனால்ட் டஸ்டர் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் மாடல்களின் ஹைப்ரிட் எடிஷனில் எது சிறந்தது என்பதற்கான முழு ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.

Duster Vs Victoris Hybrid: ரெனால்ட் டஸ்டர் மற்றும் மாருதி விக்டோரிஸ் ஹைப்ரிட் எடிஷன்களின் விலை, வசதி மற்றும் மைலேஜ் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெனால்ட் டஸ்டர் எஸ்யுவியின் ஹைப்ரிட் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் ஜப்பானின் மாருதி மற்றும் டொயோட்டா ப்ராண்ட்கள் ஹைப்ரிட் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், முதல் ஐரோப்பிய ப்ராண்டாக இந்த பிரிவில் ரெனால்ட் தடம் பதித்துள்ளது. அதோடு இந்த காரானது நேரடியாக மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மாடலுடன் போட்டியிடுகிறது. இது க்ராண்ட் விட்டாரா ஹைப்ரிட்டை காட்டிலும் சிறந்த எரிபொருள் திறனை கொண்டுள்ளது. அந்த வகையில் விக்டோரிஸ் மற்றும் டஸ்டரின் ஹைப்ரிட் எடிஷன்களில் எது சிறந்தது என்பதை அறிவதற்கான முழு ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - விலை
| வேரியண்ட் | ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் (எக்ஸ்-ஷோரூம்) | மாருதி விக்டோரிஸ் (எக்ஸ்-ஷோரூம்) |
| எண்ட்ரி லெவல் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் | ரூ.16.99 லட்சம் | ரூ.16.43 லட்சம் |
| மிட் லெவல் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் | ரூ.18.99 லட்சம் | ரூ.17.85 லட்சம் |
| டாப் லெவல் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் | ரூ.19.49 லட்சம் | ரூ.19.52- 19.99 லட்சம் |
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - பவர்ட்ரெயின்
| அம்சங்கள் | ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் | மாருதி விக்டோரிஸ் |
| இன்ஜின் மாடல் | 1.8லிட்டர் பெட்ரோல் + டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் | 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் + எலெக்ட்ரிக் மோட்டார் |
| பேட்டரி திறன் | 14KWh லித்தியம் அயர்ன் பேட்டரி | லித்தியம் அயர்ன் பேட்டரி |
| ஆற்றல் வெளிப்பாடு | 158bhp | 114bhp |
| அதிகபட்ச டார்க் | 208 Nm | 141 Nm |
| ட்ரான்ஸ்மிஷன் | மல்டி மோட் ஆட்டோமேடிக் | e-CVT |
| ட்ரைவ்ட்ரெயின் | FWD | FWD (AWD பெட்ரோல் ஆட்டோமேடிக் எடிஷன் ஸ்டேண்டர்ட் ஆப்ஷனாக உள்ளது) |
பெரிய இன்ஜின் மூலம் இந்த பிரிவிலேயெ அதிகபட்சமாக டஸ்டர் 158bhp ஆற்றலை வெளிப்படுத்துகிறது. எரிபொருள் செயல்திறனுடன் ஆற்றல் வெளிப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக பயணிக்க விரும்புவோரை இந்த கார் குறிவைக்கிறது. மாருதி விக்டோரிஸ் ஹைப்ரிட் எடிஷன் ஆனது நகர போக்குவரத்து நெரிசலில் சுமூகமான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - மைலேஜ் எப்படி?
45 லிட்டர் கொள்ளளவு கொண்ட மாருதி விக்டோரிஸ் லிட்டருக்கு 28.65 லிட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் 14 முதல் 22 கிலோ மீட்டர் தூரம் வரையில் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. மறுமுனையில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டஸ்டர் லிட்டருக்கு 29 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் 80 சதவிகித எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - அளவீடுகள்
| அளவீடுகள் | ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் | மாருதி விக்டோரிஸ் |
| நீளம் | 4343 மிமீ | 4360 மிமீ |
| அகலம் | 1813 மிமீ | 1795 மிமீ |
| உயரம் | 1656 மிமீ | 1655 மிமீ |
| வீல்பேஸ் | 2657 மிமீ | 2600 மிமீ |
| க்ரவுண்ட் க்ளியரன்ஸ் | 209 மிமீ | 205 மிமீ |
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - அம்சங்கள்
இரண்டு கார்களின் டாப் வேரியண்ட்களில் உள்ள அம்சங்கள் மற்றும் வசதிகள் அடிப்படையில் இந்த ஒப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,
ரெனால்ட் டஸ்டரில் 10.25 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்டுடன் உயரே பொருத்தப்பட்ட 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், வெண்டிலேடட் & 6 வே பவர்ட் முன்புற இருக்கைகள் உள்ளன. எஸ்யுவியில் கூடுதலாக பவர்ட் டெயில்கேட், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், மல்டி சென்ஸ் ட்ரைவ் மோட்களை பெற்றுள்ளன. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் உள்ளன.
மறுமுனையில் மாருதி விக்டோரிஸில் 10.1 இன்ச் ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவ டிஸ்பிளே, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், 64 வண்ண ஆம்பியண்ட் விளக்குகள், பவர்ட் டெயில்கேட், வயர்ல்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக லெவல் 2 ADAS அம்சங்கள், 6 ஏர்பேக்குகள் உடன் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டஸ்டர் Vs விக்டோரிஸ் ஹைப்ரிட் - யாருக்கு எது பொருந்தும்?
அதி வேகத்துடன் கார் ஓட்ட விரும்புபவர்கள், உயர் வேகத்திலும் நிலைத்தன்மை, ஐரோப்பிய ஸ்டைலிங், அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் தீவிரமான விலை வரம்பை நாடுபவர்களுக்கு டஸ்டர் நல்ல தேர்வாக இருக்கும். ஜப்பான் ப்ராண்டின் நம்பகத்தன்மை, அம்சங்கள் நிறைந்த கேபின், குறைந்த விலையில் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷன், விரிவான சேவை வசதிகளை விரும்புவோருக்கு மாருதி விக்டோரிஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















