மேலும் அறிய

Hyundai Creta: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்..! புதிய தலைமுறை க்ரேட்டா ஆன் தி வே..! பெரிய சைஸ், பாக்ஸி, ஹைப்ரிட் மாடல்

Hyundai New Gen Creta: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக உருவாகியுள்ள, ஹுண்டாயின் புதிய தலைமுறை க்ரேட்டாவிற்கான சாலை பரிசோதனை தொடங்கியுள்ளது.

Hyundai New Gen Creta: ஹுண்டாயின் புதிய தலைமுறை க்ரேட்டா கார் மாடல், 2027ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹுண்டாயின் புதிய தலைமுறை க்ரேட்டா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளாக, ஹுண்டாயின் க்ரேட்டா மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ப்ராண்டின் ஒட்டுமொத்த விற்பனையில், இந்த ஒரு கார் மாடல் மட்டுமே 35 சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மற்றும் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள, சியாரா, செல்டோஸ், டஸ்டர், குஷக், டைகன் மற்றும் நிசானின் புதிய எஸ்யுவி ஆகியவை க்ரேட்டாவிற்கு கடும் போட்டியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்த முதன்மையான மிட்-சைஸ் எஸ்யுவிக்கான நெருக்கடி கடுமையாக இருக்கும் என்றும் துறை வட்டாரங்கள் கணித்துள்ளன. இந்த சூழலில் தான், ஹுண்டாயின் புதிய தலைமுறை க்ரேட்டா மாடல் முதல் முறையாக சாலை பரிசோதனையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

போட்டியை சமாளிக்க அப்க்ரேடட் க்ரேட்டா

அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் வகையில் ஹுண்டாய், புதிய தலைமுறை க்ரேட்டாவை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹுண்டாயின் மிட்-சைஸ் எஸ்யுவியின் மூன்றாவது தலைமுறை மாடல், வரும் 2027ம் ஆண்டு உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், புதிய க்ரேட்டாவின் டிசைன் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள இரண்டாவது தலைமுறை க்ரேட்டாவானது கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Hyundai Creta: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்..! புதிய தலைமுறை க்ரேட்டா ஆன் தி வே..! பெரிய சைஸ், பாக்ஸி, ஹைப்ரிட் மாடல்

புதிய தலைமுறை க்ரேட்டாவின் வெளிப்புற டிசைன்

காரின் வெளிப்புறம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு இருந்தாலும், தற்போதைய தலைமுறை மாடலில் உள்ள வட்ட வடிவ டிசைன் கைவிடப்பட்டு, அதற்கு மாற்றாக பாக்ஸி மற்றும் ஸ்குவாட்டர் நிலைப்பாடு கொண்டு வரப்பட்டு இருப்பதை உணர முடிகிறது. அதேநேரம், ஒட்டுமொத்தமாக காரின் அளவீடுகள் அதிகரித்து இருப்பதும் தெரிகிறது. இந்த வடிவமைப்பு அணுகுமுறையானது புதிய தலைமுறை கியா செல்டோஸை போலில்லை. அது முந்தைய தலைமுறையை காட்டிலும் 95 மில்லி மீட்டர் கூடுதல் நீளம், 30 மில்லி மீட்டர் கூடுதல் அகலம் மற்றும் 80 மில்லி மீட்டர் கூடுதல் வீல்பேஸை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Hyundai Creta: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்..! புதிய தலைமுறை க்ரேட்டா ஆன் தி வே..! பெரிய சைஸ், பாக்ஸி, ஹைப்ரிட் மாடல்

முன்பக்கத்தில் வடிவமைப்பு தொடர்பான தெளிவான விவரங்கள் எதுவும் தெரியாவிட்டாலும், புதிய தலைமுறை க்ரேட்டாவின் முகப்பானது முன்பை காட்டிலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. விண்ட்ஸ்க்ரீன் செங்குத்தாக ரேக் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் 18 இன்ச் வீல்கள் மற்றும் முன் & பக்கவாட்டில் குறைவான ஓவர்ஹேங்குகள் இருப்பதை உணர முடிகிறது. வீல்பேஸ் மற்றும் உட்புற இடவசதியை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

கவனத்தை ஏற்படுத்தும் விதமாக, புதிய தலைமுறை க்ரேட்டா சோதனை யூனிட்டில் இடம்பெற்றுள்ள வீலின் டிசைனானது, புதிய செல்டோஸின் HTK ட்ரிம்மில் இடம்பெற்றுள்ளதை போன்றே உள்ளது. பின்புறத்தில் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ரேக்ட் ரூஃப்லைன்  இருப்பதையும் சோதனை புகைப்படங்கள் உணர்த்துகின்றன.


Hyundai Creta: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்..! புதிய தலைமுறை க்ரேட்டா ஆன் தி வே..! பெரிய சைஸ், பாக்ஸி, ஹைப்ரிட் மாடல்

புதிய தலைமுறை க்ரேட்டா - இன்ஜின் விவரங்கள்

கியா செல்டோஸை பிரதிபலிக்கும் விதமாக, ஹுண்டாயும் தனது புதிய தலைமுறை க்ரேட்டாவை, புதிய மற்றும் பாதுகாப்பான K3 ப்ளாட்ஃபார்மிற்கு மாற்ற உள்ளது. அதன்படி, அப்க்ரேட் செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது ஏற்கனவே அமலில் இருக்கும் அதே, 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை அப்படியே பின் தொடர உள்ளது. அனைத்து இன்ஜின் வகைகளுக்கும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டேண்டர்ட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. நேட்சுரல் ஆஸ்பிரேடட் எடிஷனானது கூடுதலாக CVT  கியர்பாக்ஸை பெறுகிறது. டீசல் இன்ஜினில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் டர்போ பெட்ரோலில் 7 ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.


Hyundai Creta: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்..! புதிய தலைமுறை க்ரேட்டா ஆன் தி வே..! பெரிய சைஸ், பாக்ஸி, ஹைப்ரிட் மாடல்

புதிய தலைமுறை க்ரேட்டா - ஹைப்ரிட் ஆப்ஷன்

K3 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதன் மூலம் புதிய தலைமுறை க்ரேட்டாவில், 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையிலான, வலுவான ஹைப்ரிட் அம்சத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை செல்டோஸ் மாடலிலும், 2027ம் ஆண்டில் இருந்து இந்த ஹைப்ரிட் அம்சம் இடம்பெற உள்ளது இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய தலைமுறை க்ரேட்டா ஆரம்பம் முதலே இந்த ஆப்ஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Frequently Asked Questions

புதிய தலைமுறை Hyundai Creta எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்?

புதிய தலைமுறை Hyundai Creta கார் மாடல், 2027ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய தலைமுறை Creta எந்த புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்?

புதிய தலைமுறை Creta, கியா செல்டோஸை பிரதிபலிக்கும் விதமாக, புதிய மற்றும் பாதுகாப்பான K3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

புதிய தலைமுறை Creta-வில் என்னென்ன இன்ஜின் விருப்பங்கள் இருக்கும்?

புதிய Creta-வில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பங்கள் இருக்கும்.

புதிய தலைமுறை Creta-வில் ஹைப்ரிட் வசதி இருக்குமா?

ஆம், புதிய தலைமுறை Creta-வில் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையிலான, வலுவான ஹைப்ரிட் அம்சம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget