மேலும் அறிய

Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?

Volkswagen Taigun Facelift: ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடல் ரூ.11 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

Volkswagen Taigun Facelift: ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடலில் வழங்கப்பட்டுள்ள, புதிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வாகன் டைகன் வந்தாச்சு

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடலானது, ரூ.11 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்காக புதிய உத்தரவாத பை-பேக் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எக்ஸ்-ஷோரூம் விலையில் 75 சதவிகித மீதி மதிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் 3 ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லுபடியாகும். சலுகையானது வரும் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பாக புதிய டைகன் கார் மாடலுக்கான முன்பதிவை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

புதிய டைகனின் விலைப்பட்டியல்

மேம்படுத்தப்பட்ட டைகனின் விலை வரம்பானது ரூ.11 லட்சத்தில் தொடங்கி, ரூ.19.3 லட்சம் வரை நீள்கிறது. அதாவது முந்தைய எடிஷனை காட்டிலும் புதிய டைகனின் தொடக்க விலையானது 42 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டாப் எண்ட் வேரியண்டின் விலையானது 11 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ட்ரிம் 1.0TSI 6MT 1.0TSI 8AT 1.5 TSI 7 DCT
கம்ஃபோர்ட் லைன் ரூ.11 லட்சம் -  
ஹைலைன் ரூ.12.7 லட்சம் ரூ.13.8 லட்சம்  
ஹைலைன் ப்ளஸ் ரூ.14.3 லட்சம் ரூ. 15.45 லட்சம்  
GT லைன் ரூ.14.6 லட்சம் ரூ.15.75 லட்சம்  
டாப் லைன் ரூ.16 லட்சம் ரூ.17.18 லட்சம்  
GT ப்ளஸ் க்ரோம் - - ரூ.19 லட்சம்
GT ப்ளஸ் ஸ்போர்ட் - - ரூ.19.3 லட்சம்

புதிய டைகனின் போட்டியாளர்கள்

ஸ்கோடா குஷக்கின் மெக்கானிக்கல் ட்வின் ஆக இருந்தாலும், தொடக்க விலை அடிப்படையில் ஃபோக்ஸ்வாகனின் தொடக்க விலையானது 31 ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகமாக உள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டரின் ரூ.10.49 லட்சம் என்ற தொடக்க விலையை காட்டிலும் ரூ.51 ஆயிரம் அதிகமாகும். உள்ளூர் சந்தையில் டைகன் மாடலானது கியா செல்டோஸ், டாடா சியாரா, ஹுண்டாய் க்ரேட்டா, ஹோண்டா எலிவேட், மாருதி விக்டோரிஸ் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய கார் மாடல்களுடன் மோத உள்ளது.


Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?

புதிய டைகனின் இன்ஜின் விவரங்கள்

டைகனின் ஃபேஸ்லிஃப்டானது அதே 115hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் மற்றும் 150hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதுவும் மாறாதா 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் தொடர்கிறது. அதேநேரம், 1.0 லிட்டர் TSI இன்ஜின் ஆனது குஷக் ஃபேஸ்லிஃப்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது.  1.0 லிட்ட TSI இன்ஜின் ஆட்டோமேடி எடிஷன் ஆனது லிட்டருக்கு 19.54 கிலோ மீட்டரும், மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 19.98 கிலோ மீட்டரும், 1.5 லிட்டர் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் எடிஷன் லிட்டருக்கு 18.85 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் என ஃபோக்ஸ்வாகன் அறிவித்துள்ளது. மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய டைகனில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அப்டேட்டாக, டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள ரியர் டிஸ்க் ப்ரேக் அம்சம் கருதப்படுகிறது. 


Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?

புதிய டைகனில் உள்ள புது அம்சங்கள்..

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டைகனில் புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்டுடன் கூடிய ஒரு மேம்படுத்தப்பட்ட  10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், அப்டேடட் ஏசி யூனிட், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் மற்றும் வென்டிலேடட் முன்புற இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. இதுபோக ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய எடிஷனிலிருந்த பெரும்பாலான அம்சங்கள் அப்படியே புதிய எடிஷனிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 


Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?

புதிய டைகனில் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்

டைகனின் வெளிப்புறத்தில் லேசான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2026 ஃபோக்ஸ்வாகன் டைன் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது, டெய்ரோன் தாக்கத்தில் முன்புற முகப்பு பக்கம், ஸ்லிம்மர் க்ரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள், ஸ்போர்டியர் பம்பர் மற்றும் ஒளிரூட்டப்பட்ட ஃபோல்க்ஸ்வாகன் லோகோ ஆகியவற்றை கொண்டுள்ளது.  இதுபோக புதியதாக வடிவமைக்கப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்கள், சீக்வண்சியல் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய திருத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் சற்றே மாற்றப்பட்ட ரியர் பம்பர் ஆகியவையும் புதிய அம்சங்களாக உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget