மேலும் அறிய

Tata Altroz: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்.. புதிய எடிஷனிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கில் மிரட்டல் - எப்புட்றா இப்படி?

Tata Altroz NCAP: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.

Tata Altroz NCAP: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், பாதுகாப்பு பரிசோதனையில் ஒட்டுமொத்தமாக 74.55 புள்ளிகளை பெற்றுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் கார் மாடல் தொடர்பான புதிய தகவல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய கார்களுக்கான பரிசோதனை முயற்சியில் வெளிப்படுத்திய அபரிவிதமான செயல்திறனே ஆச்சரியத்திற்கு காரணமாகும். அதன்படி இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கானது, பெரியவர்களுக்கான பிரிவில் 32-க்கு 29.65 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 44.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே டீசல் எடிஷன் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ரோஸ், மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் - பெரியர்வர்களுக்கான பரிசோதனை

பெரியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான பரிசோதனையில், முன்பக்கத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து காப்பதற்கான பிரிவில் 16-க்கு 15.55 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோன்று, வாகனத்தில் பயணிக்கும்போது பக்கவாட்டில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாப்பை அளிப்பதற்கான சோதனையில், 16-க்கு 14.11 புள்ளிகளை பெற்றுள்ளது. இது டாடாவின் வலுவான கட்டமைப்பின் மீது கவனத்தை பிரதிபலிக்கிறது.

டாடா ஆல்ட்ரோஸ் - குழந்தைகளுக்கான பரிசோதனை

குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை முடிவுகளும் கவனத்தை ஈர்க்கின்றன. ISOFIX இருக்கை அடிப்படையிலான பரிசோதனையில் 18 மாத மற்றும் 3 வருட குழந்தைகள் மாதிரி வடிவங்களை வைத்து பரிசோதித்ததில், இந்த ஹேட்ச்பேக்கானது பாதுகாப்பிற்கான 24 புள்ளிகளில் 23.90 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தை கட்டுப்பாட்டு அமைப்பு பிரிவில் 12-க்கு 12 புள்ளிகளையும், வாகன தணிக்கையில் 13-க்கு 9 புள்ளிகளையும் பெற்றுள்ளது. முகப்பு மற்றும் பக்கவாட்டு பாதுகாப்பு அம்சங்கள் இரண்டிலும், குழந்தைகள் பிரிவில் வலுவான செயல் திறனை பெற்றுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்:

டாடா ஆல்ட்ரோஸில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரட்டை முன்புற ஏர்பேக்குகள், பயணிகள் மற்றும் ஓட்டுனர் என இருவருக்கும் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ், லோட் லிமிட்டெர்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பாதசாரிகள் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பம், சீட்பெல்ட் ரிமைண்டர்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையாக வழங்கப்படுகின்றன.  டாப் வேரியண்ட்களில் 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இதுபோக, முன்புற இருக்கை பயணிகளுக்கு மேனுவலாக ஏர்பேக்குகளை டி-ஆக்டிவேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  

டாடா ஆல்ட்ரோஸ் - அம்சங்கள்

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்டில், ப்ரீமியம் கேபின் அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், மேம்படுத்தப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் இண்டெர்ஃபேஸ், ஹேட்ச்பேக் பிரிவிலேயே மிகவும் வசதியான இருக்கைகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, 345 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் - இன்ஜின் விவரங்கள்

இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் டாடா ஆல்ட்ரோஸ் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட்  பெட்ரோல் இன்ஜின் ஆனது, 118bhp மற்றும் 170Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 89bhp மற்றும் 200Nm ஆற்றலை உற்பத்தி செய்து, பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 12.8 விநாடிகளில் எட்டுகிறது.  இதுபோக 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின்களுக்கு 5 ஸ்பீட் மேனுவல், 5 ஸ்பீட் ஆட்டோமேடிக், 6 ஸ்பீட் டூயல் க்ளட்ச்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்ட ஒரே டாடா கார் மாடலும் ஆல்ட்ரோஸ் மட்டுமே ஆகும்.

டாடா ஆல்ட்ரோஸ் - விலை, போட்டியாளர்கள்

டாடா ஆல்ட்ரோஸ் கார் மாடலானது 22 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அதன் ஆன் - ரோட் விலையானது, ரூ.8.30 லட்சத்தில் தொடங்கி ரூ.14.38 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது மாருதி பலேனோ, ஹுண்டாய் ஐ20மற்றும் டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார் மாடல்களும் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Upcoming Bike: அடுத்தடுத்து அறிமுகமாகும் Bike! இந்த வருஷத்துக்குள்ளே இத்தனை புது வரவா?
Upcoming Bike: அடுத்தடுத்து அறிமுகமாகும் Bike! இந்த வருஷத்துக்குள்ளே இத்தனை புது வரவா?
Car Price: லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Embed widget