மேலும் அறிய

Maruti Victoris Rival: மாருதியின் பெஸ்ட் காருக்கான ஹுண்டாயின் போட்டியாளர்..! மிட்-சைஸ் SUV விவரங்கள், விலை

Maruti Victoris Rival: மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் மாடலுக்கு போட்டியாக, ஹுண்டாய் பேயோன் (Bayon)அடிப்படையிலான புதிய காரை சந்தைப்படுத்த உள்ளது.

Maruti Victoris Rival: மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் மாடலுக்கு போட்டியாய, ஹுண்டாய் நிறுவனம் புதிய மிட்-சைஸ் எஸ்யுவியை விரைவில் இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ளது.

மாருதி விக்டோரிஸ்-க்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த ஹுண்டாய் நிறுவனம் மிகப்பெரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. போட்டித்தன்மை தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு முற்றிலும் புதிய எஸ்யுவி கார் மாடல்களுடன், உள்ளூரிலேயே உருவாக்கப்பட்ட ஒரு மின்சார காம்பேக்ட் எஸ்யுவியையும் அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.  புதிய மாடல்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ள நிலையில், விரைவில் வரவுள்ள மாடல்களானது மூன்றாம் தலைமுறை க்ரேட்டா மற்றும் ஹுண்டாய் பேயோன் அடிப்படையிலான மிட்-சைஸ் எஸ்யுவி ஆக இருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் மாடல்களுக்கான போர்ட்ஃபோலியோவில், பேயோன் அடிப்படையிலான எஸ்யுவி ஆனது வென்யு மற்றும் க்ரேட்டாவிற்கு இடையே நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உள்ளூர் சந்தையில் மாருதியின் சிறந்த காராக கருதப்படும் விக்டோரிஸ் மாடல் உடன் நேரடியாக போட்டியிடும். நடப்பு 2026-27 நிதியாண்டிலேயே இது விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது. 

பேயோன் அடிப்படையிலான மிட்-சைஸ் எஸ்யுவி

Bc4i என்ற கோட்நேமை கொண்டிருக்கும் புதிய ஹூண்டாய் பேயான் அடிப்படையிலான எஸ்யுவி ஆனது, சுமார் 4.18 மீட்டர் நீளம் இருக்கும் என கூறப்படுகிறது.  பலவிதமான இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளதாம்.  இதன் ஐரோப்பிய மாடலுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிற்கான மாடல் பெரியதாகவும், மேலும் நிமிர்ந்த தோற்றத்தைக் கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியாகியுள்ள தகவல்களின்படி, நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் CNG பவர்டிரெய்ன் வசதிகளை பெறலாம். ஹுண்டாய் வாகனங்கள் அவற்றின் ப்ரீமியம் மற்றும் அம்சங்கள் நிறைந்த உட்புற வடிவமைப்புகளுக்காக அறியப்படுவதால்,புதிய மிட்-சைஸ் எஸ்யுவியும் அதே அணுகுமுறையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இன்ஜின் ஆப்ஷன்கள்:

சர்வதேச சந்தையில் ஹூண்டாய் பேயான், i20 ஹேட்ச்பேக்குடன் அதன் ப்ளாட்ஃபார்மைப் பகிர்ந்து கொள்கிறது. 1.2L நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (84PS/188Nm), 1.0L TGDi டர்போ பெட்ரோல் (100PS/172Nm) மற்றும் 1.0L TGDi 48V மைல்ட் ஹைப்ரிட் (100PS/120PS & 172Nm) என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினானது 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. அதேசமயம் டர்போ-பெட்ரோல் இன்ஜினில் 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 7-ஸ்பீட் DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெறலாம். மைல்ட் ஹைப்ரிட்டானது பவர்டிரெய்ன் 6-ஸ்பீட் iMT மற்றும் 7-ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

இதையும் படியுங்கள்: Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”

அம்சங்களும், வசதிகளும்..

உலகளாவிய ஹூண்டாய் பேயனைப் போலவே, இந்தியாவிற்கான எடிஷனும் பல நவீன அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உபகரணப் பட்டியலில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பின்புற பார்க்கிங் கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் டெக், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், பல ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல தொழில்நுட்பங்களும் இடம்பெறலாம்.

மாருதியின் பெஸ்ட் காருக்கு போட்டியா..!

ஹுண்டாய் பேயோன் கார் மாடலானது உள்ளூரில் 7.50 லட்சம் தொடங்கி 15 லட்சம் ரூபாய் வரையிலான விலை வரம்பை பெறக்கூடும் என கூறப்படுகிறது. இதன் நேரடி போட்டியாளரான மாருதி விக்டோரிஸின் விலையானது 10.50 லட்சத்தில் தொடங்கி 19.99 லட்சம் வரை நீள்கிறது. வழக்கமாக பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத, பட்ஜெட் பிரியர்களுக்கான காரை வழங்குவதிலேயே மாருதி கவனம் செலுத்தும். ஆனால், அந்த நிலையை மாற்றி விக்டோரிஸ் மாடலானது, தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெட்ரோல், சி.என்.ஜி மற்றும் வலுவான ஹைப்ரிட் என பலதரபட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களுடன், அதிகபட்சமாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் வசதிகள், பலதரப்பட்ட அம்சங்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்குகிறது. இதனிடமிருந்து வரும் போட்டியை ஹுண்டாயின் பேயோன் சமாளிக்குமா? என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget