MG Majestor: இந்தியாவின் முதல் D+ SUV..! எம்ஜி மெஜஸ்டர் - ரக்கட் டிசைன், கூலான அம்சங்கள், மாஸ் ஆன வசதிகள்
MG Majestor D+ SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான முதல் D+ SUV மாடலாக, எம்ஜி மெஜஸ்டர் வரும் பிப்ரவரி 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MG Majestor D+ SUV: எம்ஜி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆன மெஜஸ்டர் மாடலின் அம்சங்கள், விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
எம்ஜி மெஜஸ்டர் எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எம்ஜி நிறுவனத்தின் 3 வரிசை இருக்கைகளை கொண்ட புதிய எஸ்யுவி ஆன மெஜஸ்டர் வரும் பிப்ரவரி 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான டீசரும் வெளியிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் முதல் D+ SUV ஆக கருதப்படுகிறது. அதாவது இந்த பிரிவில் இடம்பெறும் மிகவும் நீளமான, அகலமான மற்றும் உயரமான மாடலாக திகழ உள்ளது. மெஜஸ்டர் கார் மாடலானது நகர்ப்புறங்களிலும், மோசமான தரைப்பரப்புகளிலும் கூட தடையில்லா செயல்திறனை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் - கட்டுமஸ்தான் டிசைன்
டீசர் ஆனது எஸ்யுவியின் கம்பீரமான டிசைன் மொழியையும், மெஜஸ்டிக் மேட்ரிக்ஸ் காம்பினேஷன் க்ரில், கூர்மையான ஃபால்கன் வகை பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், மாடர்ன் ஸ்ப்லிட் ஸ்டைல் முகப்பு விளக்குகள் ஆகியவற்றை அடையாளப்படுத்தியுள்ளது. மெஜஸ்டரில் புதியதாக வடிவமைக்கப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், பெரிய பாடி க்ளாடிங், 5 ஸ்போக் 19 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் ப்ளாக் ரூஃப் ரெயில்கள், டோர் ஹேண்டில்கள், இரண்டு பக்கங்களிலும் எக்சாஸ்ட் டிப்கள் மற்றும் கனெக்டட் டெயில்லேம்ப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அதேநேரம், பானெட், ஃபெண்டர்ஸ் மற்றும் கதவுகளில் உள்ள ஷீட் மெடல் அப்படியே க்ளோஸ்டரை பிரதிபலிக்கிறது.
எம்ஜி மெஜஸ்டர் - உட்புறம், அம்சங்கள்..
எஸ்யுவியின் ப்ரீமியம் பொசிஷனிங்கை கருத்தில் கொண்டால், எம்ஜி மெஜஸ்டரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 3 ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீடட், கூல்ட் மற்றும் பவர் அட்ஜெஸ்டுடன் கூடிய மசாஜிங் ஓட்டுனர் இருக்கை, ஹீடட் பயணியர் இருக்கை, 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமராக்கள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், லெவல் 2 ADAS என பல அம்சங்கள் காரை சிறந்ததாக மாற்றக்கூடும்.
எம்ஜி மெஜஸ்டர் - இன்ஜின் & கியர்பாக்ஸ்
வலுவான ஆற்றல் உற்பத்திக்காக க்ளோஸ்டரில் இடம்பெற்று இருந்த அதே 2.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் மெஜஸ்டரிலும் இடம்பெற்றுள்ளது. இது 216bhp மற்றும் 479Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேநேரம், ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமானது நிலையானதாக அனைத்து மாடலிலும் இடம்பெற உள்ளது.

எம்ஜி மெஜஸ்டர் - விலை, போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் போட்டியாளர்களாக திகழக்கூடிய டொயோட்டா ஃபார்ட்சுனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர் ஆகிய மாடல்களை கருத்தில் கொண்டு, எம்ஜி மெஜஸ்டரின் விலை ரூ.39.50 லட்சத்தில் தொடங்கி ரூ.44 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
























