மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 172 கிலோமீட்டர் மைலேஜ்.. இளைஞர்களை கவர்கிறதா Matter AERA இ பைக்?

மின்சார பைக்கான Matter AERA-வின் சிறப்புகள், தரம், மைலேஜ் மற்றும் விலை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், Matter நிறுவனமும் இ வாகன தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது.

Matter AERA:

இவர்களின் மின்சார பைக்கான Matter AERA இரு சக்கர வாகனத்தின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Matter AERA இ பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

1. AERA 5000  - ரூபாய் 1 லட்சத்து 93 ஆயிரத்து 654 

2. AERA 5000+ - ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரத்து 437 

ஆகிய 2 வேரியண்ட்களும் மேலே கூறிய விலைக்கு விற்கப்படுகிறது. 

மைலேஜ்:

இந்த Matter AERA இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 172 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோடில் இந்த பைக் செயல்படுகிறது. 2.8 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம்.

சிறப்புகள்:

லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இயல்பாகவே சார்ஜிங் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. இதில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. இதன் எடை 168 கிலோ ஆகும். இதில் 4 கியர்கள் உள்ளது. இந்த பைக் நீலம், கருப்பு, சாம்பல், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் உள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் உள்ளது. இவை ட்யூப்லஸ் டயர்கள் ஆகும். டெலிஸ்கோபிக் ஃபோர்க், ட்வைன்ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் முறையே முன்பக்கமும் மற்றும் பின்பக்கம் உள்ளது. இதன் பேட்டரி 3 வருடம் வாரண்டி கொண்டது.  மோட்டார் 3 வருடம் வாரண்டி கொண்டது.

வசதிகள்:

7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. ப்ளூடூத் வசதி கொண்டது. மேப் நேவிகேஷன் வசதி உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ரிவர்ஸ் ஓட்டும் வசதியும் உள்ளது. இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் தோற்றம் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget