மேலும் அறிய

Maruti Suzuki : காம்பாக்ட் டூ யூட்டிலிட்டி கார்ஸ்.. எகிறிய டிமாண்ட்: மாருதி சுசூகிக்கு அடித்த ஜாக்பாட்!

2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்திற்கான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கூட்டு விற்பனை 4,82,334 யுனிட்களையும் எட்டியுள்ளது.

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 2026 மே மாதத்தில் மொத்தம் 2,42,688 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 2025 மே மாதத்தில் பதிவான 1,80,077 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்த விற்பனையில் பயணிகள் வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான தயாரிப்புகள் (OEM) உள்ளடங்கிய உள்நாட்டு விற்பனை 2,00,774 அலகுகளாகவும், ஏற்றுமதி 41,914 அலகுகளாகவும் உள்ளன.

உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை

நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை நடப்பு மாதத்தில் 1,90,337 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதத்தில் 1,35,962 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இலகுரக வணிக வாகனங்களையும் சேர்த்து, மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த 1,38,690 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,93,535 அலகுகளாக அதிகரித்துள்ளது.

காம்பாக்ட் மற்றும் யூட்டிலிட்டி வாகனங்கள் பிரிவு

பயணிகள் கார் பிரிவில் மொத்தம் 97,830 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் வேகன்ஆர் போன்ற மாடல்களை உள்ளடக்கிய காம்பாக்ட் மற்றும் நடுத்தர அளவிலான கார்கள் மட்டும் 81,555 அலகுகள் விற்பனையாகியுள்ளன, இது 2025 மே மாதத்தில் 61,960 ஆக இருந்தது. அதேபோல் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட யூட்டிலிட்டி ரக வாகனங்கள் கடந்த ஆண்டு விற்பனையான 54,899 அலகுகளுக்கு எதிராக, இந்த ஆண்டு 79,267 அலகுகள் விற்பனையை பதிவு செய்துள்ளன.

வணிக வாகனங்கள் மற்றும் மற்ற் பிரிவுகள்

ஈகோ (Eeco) வேன் விற்பனை இந்த மாதத்தில் 13,240 அலகுகளாக இருந்த நிலையில், சூப்பர் கேரி (Super Carry) இலகுரக வணிக வாகனங்களின் விற்பனை கடந்த 2025 மே மாதத்தின் 2,728 அலகுகளிலிருந்து 3,198 அலகுகளாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், பிற நிறுவனங்களுக்கான தயாரிப்பு (OEM) விநியோகம் கடந்த ஆண்டின் 10,168 அலகுகளிலிருந்து 7,239 அலகுகளாக சரிவைச் சந்தித்துள்ளது. எனினும், ஏற்றுமதி 2025 மே மாதத்தில் இருந்த 31,219 அலகுகளிலிருந்து 2026 மே மாதத்தில் 41,914 அலகுகளாக அதிகரித்துள்ளது.

நிதியாண்டின் ஒட்டுமொத்த  விற்பனை

2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்திற்கான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கூட்டு விற்பனை 4,82,334 யுனிட்களையும் எட்டியுள்ளது. இது 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 3,59,868 அலகுகளாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?
பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget