எலக்ட்ரிக் எஸ்யுவி சண்டை: மாருதி இ விட்டாரா Vs க்ரெட்டா EV- எது பெஸ்ட்?
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), லெவல்-2 ADAS, லேன் கீப் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ESC போன்ற மேம்பட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் எஸ்யுவி கார்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இரண்டு முக்கிய மாடல்களாக மாருதி சுசுகி இ விட்டாரா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் கார்கள் உள்ளன. இவ்விரண்டு கார்களின் முழு விவரங்கள் இதோ:
மாருதி சுசுகி இ-விட்டாரா:
-
பேட்டரி & ரேஞ்ச்: இதில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. டெல்டா (Delta) வேரியண்டில் 49 kWh LFP பேட்டரி (142 bhp, 193 Nm டார்க்) பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கி.மீ ரேஞ்ச் தரும். ஜீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் பெரிய 61 kWh LFP பேட்டரி (172-174 bhp, 193 Nm டார்க்) உள்ளது. இது அதிகபட்சமாக 543 கி.மீ ரேஞ்ச் வழங்கும். இது ஃபிரண்ட்-வீல் டிரைவ் அமைப்புடன் வருகிறது.
-
வடிவமைப்பு & அம்சங்கள்: 18 இன்ச் அலாய் வீல்கள், LED DRL, சாய்வான பின்பக்க இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஏசி, 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகொண்ட 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளன.
-
விலை (எக்ஸ்- ஷோரூம்): டெல்டா வேரியண்ட் ரூ.16.19 லட்சம். ஜீட்டா மற்றும் ஆல்ஃபா விலை சுமார் ரூ.19.99 லட்சம். BaaS திட்டத்தின் கீழ், பேட்டரி EMI தவிர்த்து இதன் தொடக்க விலை ரூ.10.99 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக்:
-
பேட்டரி & ரேஞ்ச்: இதிலும் இரு ஆப்ஷன்கள் உள்ளன. 42 kWh பேட்டரி மாடல் (133-135 bhp, 255 Nm டார்க்) 390 கி.மீ ரேஞ்ச் வழங்கும். பெரிய 51.4 kWh பேட்டரி (169-171 bhp, 255 Nm டார்க்) 473 கி.மீ ரேஞ்ச் தரும். சில BaaS வேரியண்ட்களில் 510 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும்.
-
வடிவமைப்பு & அம்சங்கள்: EV டிஜிட்டல் கிளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், பின்பக்கப் பயணிகளுக்கு 11.6 இன்ச் ஸ்கிரீன் (சில மாடல்களில்), 8-வே பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் சீட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஜோன் ஏசி உள்ளன.
-
பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), லெவல்-2 ADAS, லேன் கீப் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ESC போன்ற மேம்பட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
-
விலை (எக்ஸ்-ஷோரூம்): ரூ.18.03 லட்சம் முதல் ரூ.25.22 லட்சம் வரை. இதன் BaaS மாடல் தொடக்க விலை ரூ.10.99 லட்சம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















