மேலும் அறிய

Brezza Facelift: ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்

Brezza Facelift 2026: மாருதி சுசுகி, தனது பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி-யான பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் பற்றிய முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில், மாருதி சுசூகி  நிறுவனத்தின் மிக முக்கியமான மாடல்களில் ஒன்றாக திகழும் பிரெஸ்ஸா, அந்நிறுவனத்தின் எஸ்யூவி பிரிவில் ஒரு முக்கிய பங்கையும் வகிக்கிறது. இந்நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய  பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் மாடலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, அசத்தலான அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொண்டுள்ளது. இந்த புதிய பிரெஸ்ஸா குறித்த முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன புதுமைகள் உள்ளன.?

மேம்படுத்தப்பட்ட புதிய பிரெஸ்ஸா,  அதே நேர்த்தியான எஸ்யூவி வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும்  போதிலும், நுட்பமான தோற்ற மேம்பாடுகளை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் மறுவடிவமைக்கப்பட்ட கிரில் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் இடம்பெற்றுள்ளது. அதே சமயம், ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில், திருத்தப்பட்ட டெயில்-லேம்ப் கூறுகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பின்புற வடிவமைப்பு ஆகியவை, இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதன் முந்தைய மாடலில் இருந்து சற்றே வேறுபடுத்திக் காட்டுகின்றன.

கேபினுக்குள், பிரெஸ்ஸா அதன் கருப்பு மற்றும் பழுப்பு நிற இரட்டை வண்ண வடிவமைப்பை தொடர்கிறது. இருப்பினும், உள்ளமைக்கப்பட்ட செயலிகளுடன் கூடிய பெரிய 10.1-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, அலெக்ஸா ஒருங்கிணைப்பு, காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள் மற்றும் பளபளப்பான கருப்பு ஸ்டீயரிங் வீல் இன்செர்ட் உள்ளிட்ட பல புதிய ப்ரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது.

இதில், தானாக ஒளி அளவை குறைக்கும் ஐஆர்விஎம் (IRVM), பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ரீச் மற்றும் ரேக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல், 360-டிகிரி கேமரா, சன்கிளாஸ் ஹோல்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சேமிப்பு வசதியுடன் மறுவடிவமைக்கப்பட்ட சென்டர் ஆர்ம்ரெஸ்ட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை புதிய அம்சங்களில் அடங்கும்.

அதிகபட்ச பாதுகாப்பு

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இந்த எஸ்யூவியில், பாதுகாப்பும் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிரெஸ்ஸாவில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட்டுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), EBD உடன் கூடிய ABS, ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அடிப்படை அம்சங்கள் உள்ளன. 

கூடுதலாக, பாதை மாற்ற எச்சரிக்கையுடன் கூடிய பார்வைப்புலனற்ற பகுதி எச்சரிக்கை(Blind Spot Alert with Lane Keep Assistance), பின்புற குறுக்குப் போக்குவரத்து எச்சரிக்கை, பாதுகாப்பான வெளியேற்ற எச்சரிக்கை, டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு (TPMS), 360-டிகிரி கேமரா, பின்புற பனி நீக்கி மற்றும் வைப்பர், அவசர நிறுத்த அலெர்ட் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை, ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன.

இதற்கெல்லாம் மேலாக, மேம்படுத்தப்பட்ட புதிய பிரெஸ்ஸா, பாரத் NCAP-ன் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்று, இந்த பிரிவில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எஞ்சின் தேர்வுகள்

புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், 3 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், 103 hp மற்றும் 139 Nm ஆற்றலை வழங்கும் 1.5-லிட்டர் K15C நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 110 hp மற்றும் 170 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூட் ஸ்பேஸுக்காக அண்டர்பாடி மவுண்டட் சிலிண்டருடன் கூடிய ஒரு CNG வேரியன்ட் ஆகியவை அடங்கும்.

பெட்ரோல் மாடல்களில், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், CNG மாடல் பிரத்தியேகமாக மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என தெரிகிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

பிரெஸ்ஸாவின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை ரூ.8.26 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று கூடுதலாக உள்ளது. இந்த எஸ்யூவி அரீனா டீலர்ஷிப்கள் மூலமாகவே தொடர்ந்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே, ரூ.11,000 டோக்கன் தொகையுடன் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. 

இதன் போட்டியாளர்களை பொறுத்தவரை, கடுமையான போட்டி நிலவும் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி பிரிவில், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மாடல்களுடன் இந்த புதிய பிரெஸ்ஸா போட்டியிடும்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget