மேலும் அறிய

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏத்த கார்.. புதிய Maruti Brezza 2026 மாடலில் என்ன ஸ்பெஷல்? விலை எவ்வளவு?

Maruti Brezza Facelift 2026: புதிய மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் 2026 மாடல் அறிமுகம் ஆக உள்ள நிலையில் புதிய அம்சங்கள் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

காம்பாக்ட் எஸ்யூவியில் மிகவும் பிரபலமான மாடல்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஒன்றாகும். நடுத்தர வர்க்க மக்களின் விருப்பமான கார்களில் இதுவும் ஒன்று. இப்போது, இந்த எஸ்யூவிக்கு ஒரு பெரிய அப்டேட்டை வழங்க மாருதி தயாராகியுள்ளது. 2022 இல் இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸாவை வெளியிட்ட மாருதி, இப்போது ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை இந்த மாதம் 24 ஆம் தேதி (ஜூலை 24, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. ஏற்கனவே ரூ.11,000 டோக்கன் தொகையுடன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. புதிய பிரெஸ்ஸாவில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப் போகின்றன என்பதைப் பார்ப்போம்.

வெளிப்புறம்

புதிய பிரெஸ்ஸாவில் முதலில் கவனிக்கப்படும் மாற்றம் வெளிப்புற வடிவமைப்பில்தான் இருக்கும். சமீபத்தில் வெளியான டீசரில், புதிய கிரில் வடிவமைப்புடன் ஹெட்லைட்களை இணைக்கும் மெல்லிய சிவப்பு நிற பட்டை காணப்பட்டது. முன் பம்பரின் கீழ் பகுதியிலும் சிவப்பு நிற டிரிம் கொடுக்கப்பட உள்ளது. கதவுகளின் கீழ் பகுதியில் புதிய கிளாடிங் இருக்கும், மேலும் டெயில்கேட்டில் உள்ள "Brezza" லோகோவுக்கு புதிய எழுத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலாய் வீல்களுக்கும் புதிய வடிவமைப்பு வரவுள்ளது.

சோதனை ஓட்டத்தின்போது காணப்பட்ட முன்மாதிரிகளின்படி, 4-ஸ்போக் வடிவமைப்பு வர வாய்ப்புள்ளது. முன் பம்பர் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப்கள் சற்று உயரத்தில் பொருத்தப்பட்டு, சில்வர் டிரிம் & சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், L வடிவ DRL களுடன் வரும் LED ஹெட்லைட்கள், மெல்லிய LED டெயில் லைட்கள் அப்படியே தொடரும்.

உட்புறம் 

கேபின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், புதிய கலர் தீம், பிரீமியம் டிரிம் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதுள்ள HUD தொடர்வதுடன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 9 இன்ச் முதல் 10.1 இன்ச் பெரிய டச்ஸ்கிரீனாக மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 

வசதிகளின் அடிப்படையில் புதிய பிரெஸ்ஸா மேலும் கவர்ச்சிகரமானதாக மாற உள்ளது. பின் இருக்கை ஹெட்ரெஸ்ட்களுக்கு புதிய வளைந்த பக்க போல்ஸ்டரிங் கொடுக்கப்பட உள்ளதாக தகவல். அதேபோல், பவர்டு டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பிரீமியம் அம்சங்கள் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. பாதுகாப்பிற்காக Level-2 ADAS, முன் பார்க்கிங் சென்சார்கள் போன்ற நவீன அம்சங்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று சோதனை ஓட்டத்தின் போது காணப்பட்ட வாகனங்கள் மூலம் தெரிய வருகிறது.

டர்போ பெட்ரோல் எஞ்சின்

பவர்டிரெய்ன் அடிப்படையில் இந்த முறை மிக முக்கியமான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை இந்த பிரிவில் டர்போ பெட்ரோல் எஞ்சின் இல்லாத ஒரே எஸ்யூவியாக இருந்த பிரெஸ்ஸாவிற்கு, இனி ஃபிராங்க்ஸில் உள்ள 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த எஞ்சினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வர வாய்ப்புள்ளது. மேலும், இதே எஞ்சினுக்கு CNG ஆப்ஷனையும் மாருதி வழங்க வாய்ப்புள்ளது என்று தகவல்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் மற்றொரு நன்மையும் உள்ளது. தற்போது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுக்கு பொருந்தும் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு பதிலாக, சிறிய எஞ்சின் காரணமாக 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் புதிய பிரெஸ்ஸாவின் விலையை மேலும் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்க வாய்ப்புகள் உள்ளன.

விலை 

விலையை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், தற்போது விற்பனையாகும் பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.26 லட்சம் முதல் ரூ.12.86 லட்சம் வரை உள்ளது. புதிய மாடலில் வடிவமைப்பு & அம்சங்களில் அப்டேட்கள் வந்தாலும், சிறிய எஞ்சின் காரணமாக விலையை இதே அளவில் வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று மார்க்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

புதிய மாருதி பிரெஸ்ஸா வெளியான பிறகு  ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஸ்கோடா குஷாக், மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட் & கியா சைரோஸ் போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget