நோ டென்ஷன், போய்ட்டே இருக்கலாம்..! ரேஞ்சில் மிரட்டும் டாப் 5 மின்சா கார்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: auto.mahindra.com/cars.tatamotors.com

எஸ்யுவிக்களின் ஆதிக்கம் ஒருபுறமிருக்க, நாட்டில் மின்சார கார்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது

Image Source: auto.mahindra.com/marutisuzuki.com

குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் மின்சார கார்கள் உதவுகின்றன

Image Source: cars.tatamotors.com

இந்திய சந்தையில் தரமாகவும், அதிக ரேஞ்சுடனும் கிடைக்கும் மின்சார கார்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

Image Source: auto.mahindra.com

ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனில் கிடைக்கும் ஒரே மின்சார எஸ்யுவி ஹாரியர் மட்டுமே. 75KWh பேட்டரி பேக்கை கொண்டு 627கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் விலையானது ரூ.21.49 லட்சத்தில் தொடங்குகிறது.

Image Source: marutisuzuki.com

எம்ஜி விண்ட்சர் ப்ரோ கார் மாடலானது 52.9KWh பேட்டரி ஆப்ஷனை நிலையானதாக கொண்டுள்ளது. 449 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.12.25 லட்சமாகும்.

Image Source: auto.mahindra.com

7 சீட்டர் எம்பிவி கார் மாடலான BYD EMAX 7 வசதியான பயணத்தை வழங்குகிறது. 71.8KWh பேட்டரி பேக்கை கொண்டு 530 கிலோ மீட்டர் எரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ.26.90 லட்சமாகும்.

Image Source: auto.mahindra.com

மஹிந்த்ராவின் புதிய மாடலாக XEV 9S 7 சீட்டர் மின்சார எஸ்யுவி திகழ்கிறது. 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய, 79KWh பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.19.95 லட்சமாகும்.

Image Source: cars.tatamotors.com

மஹிந்த்ராவின் XEV 9e கார் மாடலின் தொடக்க விலை ரூ.21.90 லட்சமாகும். இதில் உள்ள 79KWh பேட்டரி பேக் ஆனது, 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Source: cars.tatamotors.com