மேலும் அறிய

Scorpio Classic Vs Scorpio N: ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ என் - எது பெஸ்ட்? வித்தியாசம் என்ன? விலை, மைலேஜ்

Scorpio Classic Vs Scorpio N: மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ க்ளாசிக் மற்றும் ஸ்கார்ப்பியோ என் கார் மாடல்களில் எது சிறந்தது? எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Scorpio Classic Vs Scorpio N: மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ க்ளாசிக் மற்றும் ஸ்கார்ப்பியோ என் கார் மாடல்கள் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ N

உள்நாட்டு சந்தையில் எஸ்யுவி கார் பிரிவில் மிகுந்த கவனம் செலுத்தி, ஆண்டு விற்பனையில் ஹுண்டாயை பின்னுக்கு தள்ளி இந்திய நிறுவனமான மஹிந்த்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ப்ராண்டின் சிறந்த விற்பனை மாடலாக இருக்கும் ஸ்கார்ப்பியோ (க்ளாசிக்/என்), கடந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையில் மட்டுமே ஒரு லட்சத்து 61 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் அளவில் விற்பனையாகியுள்ளது. அதவாது மஹிந்த்ராவின் வளர்ச்சிக்கு ஸ்கார்ப்பியோ மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் ஸ்கார்ப்பியோவின் க்ளாசிக் மற்றும் என் எடிஷன்களில் எது சிறந்தது? எந்த பயனாளருக்கு எந்த எடிஷன் பொருந்தும்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ N - விலை

சென்னையில் மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ க்ளாசிக் கார் மாடலின் விலை, 13 லட்சத்தில் தொடங்கி 16.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்டில் 9 சீட்டர் கான்ஃபிகரேஷனில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஸ்கார்ப்பியோ என் எடிஷனின் விலை 13.49 லட்சத்தில் தொடங்கி 24.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. சுமார் 40-க்கும் அதிகமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 7 பேர் வரை அமரும் வகையிலான கான்ஃபிகரேஷனில் மட்டுமே இந்த எஸ்யுவி கிடைக்கப்பெறுகிறது.



Scorpio Classic Vs Scorpio N: ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ என் - எது பெஸ்ட்? வித்தியாசம் என்ன? விலை, மைலேஜ்

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ N - எது பெஸ்ட்?

அம்சங்கள் ஸ்கார்ப்பியோ க்ளாசிக் ஸ்கார்ப்பியோ N
இன்ஜின் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே 2.0 லிட்டர் டீசல் & 2.0 லிட்டர் பெட்ரோல்
ஆற்றல் 132PS 175PS (டீசல்)/203PS(பெட்ரோல்)
ட்ரான்ஸ்மிஷன் 6 ஸ்பீட் மேனுவல்  6 ஸ்பீட் மேனுவல்/ஆட்டோமேடிக்
4WD ஆப்ஷன் இல்லை (ரியர் வீல் ட்ரைவ் மட்டுமே) ஆம் (டீசல் இன்ஜினில் மட்டுமே)
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 209மிமீ 187மிமீ
சீட்டிங் 7/9 சீட்டர் 6/7 சீட்டர்
பாதுகாப்பு ரேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை சர்வதேச பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்
மைலேஜ் 14.44 கிமீ/லி (நிறுவனம் அறிவித்தது) 15.94 கிமீ/லி (நிறுவனம் அறிவித்தது)

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ N - வித்தியாசம்

டிசைன் & தோற்றம்: ஸ்கார்ப்பியோ க்ளாசிக்கானது உயரமான மற்றும் பாக்ஸி தோற்றத்தை கொண்டு, தனக்கே உரிய அடையாளமான பானெட் ஸ்கூப், பக்கவாட்டில் எதிரெதிரே அமரும் வகையிலான மூன்றாவது வரிசை இருக்கை ஆகியவற்றின் மூலம் கிராமப்புற பயன்பாட்டிற்கும், அரசியல் கான்வாய்களுக்கும் உகந்ததாக உள்ளது. ஆனால், ஸ்கார்ப்பியோ என் எடிஷனானது அகலம் மற்றும் குறைவாக இருந்தாலும், எல்இடி லைட்டிங் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் மூலம் ப்ரீமியம் தோற்றத்தை கொண்டுள்ளது.

செயல்திறன்: மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ என் ஆனது கூடுதல் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இதில் நவீன சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளதால், குலுங்கினாலும் உடலுக்கு அசதி தெரியாது. க்ளாசிக்குடன் ஒப்பீடு செய்தால் முந்தைய எடிஷன் சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது.

உட்புறம் & அம்சங்கள்: தரத்தை ஒப்பிடுகையில் ஸ்கார்ப்பியோ என் எடிஷன் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெறுகிறது. சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 12 ஸ்பீக்கர் சோனி சிஸ்டம் போன்ற மாடர்ன் அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஸ்கார்ப்பியோ க்ளாசிக்கானது அடிப்படையான எடிஷன், நிலைத்தன்மை மற்றும் எளிய பராபரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

பாதுகாப்பு: ஸ்காப்பியோ என் ஆனது மிகவும் பாதுகாப்பான ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டு, சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆனால், க்ளாசிக் எடிஷனில் இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ஆண்டி லாக்கிங் ப்ரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது.


Scorpio Classic Vs Scorpio N: ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ என் - எது பெஸ்ட்? வித்தியாசம் என்ன? விலை, மைலேஜ்

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் Vs ஸ்கார்ப்பியோ N - யாருக்கு எது?

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் - விண்டேஜ் லுக், மோசமான கிராமப்புற சாலைகளிலும் வலுவாக செயல்படக்கூடிய கரடுமுரடான வாகனம் அல்லது குடும்பமாக பயணிக்க பெரிய நம்பிக்கைக்குரிய வாகனம் வேண்டுமானால் ஸ்கார்ப்பியோ க்ளாசிக்கை தேர்வு செய்யலாம்.

ஸ்கார்ப்பியோ N - பாதுகாப்பான 4 வீல் ட்ரைவ் ஆப்ஷனை கொண்டு சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பகுதி பயன்பாட்டிற்கு உகந்த நவீன குடும்பங்களுக்கான காரை விரும்பினால் ஸ்கார்ப்பியோ என் எடிஷனை தேர்வு செய்யலாம்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
maruti suzuki s presso : 32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget