மேலும் அறிய

Mahindra Scorpio: என்னடா பெரியா இன்னோவா..! ரூ.13 லட்சத்துக்கே 9 சீட்டர் எஸ்யுவி - பெர்ஃபாமன்ஸ் கிங், மொத்தமா எப்படி?

Mahindra Scorpio Classic: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவை காட்டிலும் மலிவான விலையில் கிடைக்கும், 9 சீட்டர் மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக் கார் மாடல் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Mahindra Scorpio Classic: மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக் கார் மாடலின் 9 சீட்டர் எடிஷன் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 9 சீட்டர்

இந்திய சந்தையில் குடும்பமாக பயணிக்க விரும்புவோர் அனைவருக்கும் இன்னோவா க்ரிஸ்டா என்பது முதன்மையானதாக தேர்வாக உள்ளது. இதன் விலை 18 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 25 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை நீடிக்கிறது. ஆனால், இதைகாட்டிலும் சுமார் 6 லட்சம் ரூபாய் வரையிலான குறைந்தவிலையிலேயே, செயல்திறன் மிக்க 9 சீட்டர் கார் மாடல் ஒன்று உள்ளூர் சந்தையில் கிடைக்கிறது. விற்பனையிலும் தொடர்ந்து அசத்தி வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அது மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ கார் மாடல் தான். 9 பேர் தாராளமாக அமந்து குடும்பமாக பயணிக்க ஏற்ற தேர்வாக உள்ளது. சென்னையில் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 13 லட்சத்து 19 ஆயிரத்து 399 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 9 சீட்டர் டிசைன்

கடந்த மார்ச் மாதத்தில் உள்ளூர் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம் 60 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த மகத்தான சாதனைக்கு ப்ராண்டின் ஸ்கார்ப்பியோ மாடல் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த காரானது ஸ்கார்ப்பியோ க்ளாசிக் மற்றும் ஸ்கார்ப்பியோ என் என இரண்டு எடிஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஸ்கார்ப்பியோ க்ளாசிக்கில் குறிப்பாக அதன் அடிப்படை  எஸ் வேரியண்டில் தான் 9 சீட்டர் லே-அவுட் கிடைக்கிறது.  முதல் வரிசையில் முன்னோக்கிய படி இரண்டு பேரும், இரண்டாவது வரிசையில் மூன்று பேரும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைசி வரிசையில் இரண்டு முழு நீள இருக்கைகள் எதிரெதிரே பார்த்தபடியும், 4 பேர் அமரும் வகையிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் காரை மலிவு விலையிலேயே பயணிகள் அணுகும் வகையில் இந்த காரானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Mahindra Scorpio: என்னடா பெரியா இன்னோவா..! ரூ.13 லட்சத்துக்கே 9 சீட்டர் எஸ்யுவி - பெர்ஃபாமன்ஸ் கிங், மொத்தமா எப்படி?

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 9 சீட்டர் - இன்ஜின்

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 9 சீட்டரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. ரியர் வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனில் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் எனும் ஒற்றை ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. 2184சிசி திறன் கொண்ட இந்த இன்ஜின் ஆனது 130bhp, 300Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை கொண்டு, லிட்டருக்கு சுமார் 14.44 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம். அதன்படி டேங்கை முழுமையாக நிரப்பினால் 960 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றல் இன்றி பயணிக்கலாம். இது குடும்பமாக பயணிக்க விரும்புவோருக்கு, பட்ஜெட்டில் மிகப்பெரிய சேமிப்பாக இருக்கும்.



Mahindra Scorpio: என்னடா பெரியா இன்னோவா..! ரூ.13 லட்சத்துக்கே 9 சீட்டர் எஸ்யுவி - பெர்ஃபாமன்ஸ் கிங், மொத்தமா எப்படி?

ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 9 சீட்டர் - முக்கிய அம்சங்கள்

வெளிப்புறத்தில் ஹாலோஜென் முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் லேம்ப்கள், 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், தனித்துவமான பான்னெட் ஸ்கூப் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. உட்புறத்தில் ப்ளாக் தீமில் வினைல் அப்ஹோல்ஸ்ட்ரி, மேனுவல் ஏர் கண்டிஷனிங், இரண்டாவது வரிசையில் ஏசி வெண்ட்கள் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகளும், பின்புறத்தில் ட்ரம் ப்ரேக்குகளும் இடம்பெற்றுள்ளன.  பயணம் தொடர்பான தகவல்களை அறிய சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீன் உள்ளது. அதேநேரம், வேகம் உள்ளிட்ட விவரங்களுக்கு அனலாக் டயல்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
1.25 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடித் தள்ளுபடியை அள்ளித்தந்த Renault - எந்த காருக்கு எவ்ளோ?
1.25 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடித் தள்ளுபடியை அள்ளித்தந்த Renault - எந்த காருக்கு எவ்ளோ?
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Embed widget