மேலும் அறிய

Hyundai Verna Facelift: வெர்னா இன்டீரியர்.. வரப்போகும் மாற்றங்கள் என்ன? விர்டஸ், ஸ்லாவியாவை சமாளிக்குமா புது எடிஷன்?

Hyundai Verna Facelift 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்தில் வரப்போகும், புதிய மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Verna Facelift: ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் உள்ளூர் சந்தையில் ஸ்லாவியா மற்றும் விர்டஸ் கார் மாடல்களை சமாளிக்குமா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் வெர்னா கார் மாடலின், ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள நான்காவது தலைமுறை செடானானது, 2023ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது வழங்கப்படும் ஃபேஸ்லிஃப்டில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பகுதி, சில குறிப்பிடத்தக்க உட்புற அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன் அடிப்படை சில்-அவுட் தோற்றம் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தாலும், ஸ்டைலிங் அடிப்படையில் பெரிய அளவிலான மேம்படுத்தல்களை பெற உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இது சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - புதிய அலாய் வீல்கள்,கலர்

காரின் முன்பகுதியில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய பம்பர் வழங்கப்பட உள்ளது. லைட்பார் அப்படியே தொடர்ந்தாலும், முகப்பு விளக்கு யூனிட் புதியதாக இணைக்கப்பட உள்ளது. புதிய அலாய் வீல்களுடன், கூடுதல் வண்ண விருப்பங்களும் வழங்கப்பட உள்ளன. பின்புறத்தில் புதிய டெயில் லேம்ப்களுடன், விளக்கு அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. வெளிப்புறத்துடன் ஒப்பிடுகையில் உட்புறத்தில் அதிகப்படியான அப்டேட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Hyundai Verna Facelift: வெர்னா இன்டீரியர்.. வரப்போகும் மாற்றங்கள் என்ன? விர்டஸ், ஸ்லாவியாவை சமாளிக்குமா புது எடிஷன்?

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - புதிய ஸ்டியரிங் வீல், கனெக்டிவிட்டி

ஹுண்டாயின் புதிய வென்யுவில் வழங்கப்பட்டுள்ளதை போன்று திருத்தப்பட்ட ஸ்டியரிங் வீல் புதிய வெர்னாவில் இடம்பெற உள்ளது. மேலும் அதில் மார்ஸ் கோடில் ப்ராண்டின் லோகோவும் பொறிக்கப்பட்டு இருப்பதை, சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. ஸ்க்ரீன்கள் இணைக்கப்பட்டு இருந்தாலும், இன்ஃபோடெயின்மெண்டானது முற்றிலும் புதியதாகவும், அண்மைக்கால கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கும். ஏராளமான அம்சங்களை கொண்ட வலுவான செடான் ஆக இருந்தாலும், புதிய வெர்னாவில் மேலும் சில வசதிகள் இணைக்கப்பட உள்ளன. பெரும்பாலானவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வென்யுவில் இருந்து அப்படியே பின் தொடரப்படுகிறது. இதில் சிவப்பு நிற ஸ்டிட்சிங்குடன் கூசிய டூயல் - டோன் அப்ஹோல்ஸ்ட்ரியும் அடங்கும். மற்ற கூடுதல் அம்சங்கள் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Hyundai Verna Facelift: வெர்னா இன்டீரியர்.. வரப்போகும் மாற்றங்கள் என்ன? விர்டஸ், ஸ்லாவியாவை சமாளிக்குமா புது எடிஷன்?

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் ஆப்ஷனில் மாற்றமா?

இன்ஜின் அடிப்படையில் புதிய வெர்னாவில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்களை, மேனுவல் மற்றும் DCT வசதியுடன் பயனர்கள் தொடர்ந்து தேர்வு செய்யலாம். இதனால் எரிபொருள் செயல்திறன், நம்பகத்தன்மையில் பயனர்கள் எந்த மாற்றத்தையும் பெறப்போவதில்லை. அதேநேரம், டர்போ பெட்ரோல் ஆப்ஷனானது என் - லைன் வேரியண்டை பெறக்கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - விலை, போட்டியாளர்கள்

ஒட்டுமொத்தத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய வெர்னாவானது, தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் புதிய சொனாட்டாவை போன்றே கூடுதல் ப்ரீமியம் செடானாக இருக்கும் என கருதப்படுகிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.10.80 லட்சத்தில் தொடங்கி ரூ.17.13 லட்சம் வரை நீள்கிறது. உட்புற அம்சங்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள அப்க்ரேட்களால், புதிய எடிஷனின் விலையானது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அதிகரிக்கலாம். இதனால் செடானின் கேபின் மதிப்பு உயர்த்தப்பட்டாலும், அதே போட்டித்தன்மை மிக்க விலை வரம்பில் பொருத்தப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் மாருதி சுசுகி சியாஸ் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Frequently Asked Questions

புதிய ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?

புதிய வெர்னாவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பகுதி, புதிய பம்பர், புதிய முகப்பு விளக்குகள், புதிய அலாய் வீல்கள் மற்றும் கூடுதல் வண்ண விருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உட்புறத்திலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படும்.

புதிய வெர்னாவின் இன்ஜின் விருப்பங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?

இல்லை, இன்ஜின் அடிப்படையில் புதிய வெர்னாவில் எந்த மாற்றமும் இல்லை. 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

புதிய ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் விலை என்னவாக இருக்கும்?

தற்போதைய மாடலின் விலையை விட புதிய எடிஷனின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வெர்னா எந்தெந்த கார்களுடன் போட்டியிடும்?

இந்த கார் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் மாருதி சுசுகி சியாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டியிடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget