மேலும் அறிய

Tata Punch EV: அட்ராசக்க..! ஒரே சார்ஜ், 590KM ரேஞ்ச்.. மிரட்டும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், பேட்டரியில் டாடாவின் அப்க்ரேட்..

Tata Punch EV Facelift Range: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tata Punch EV Facelift Range: டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், வரும் பிப்ரவரி 20ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது.

வெளியீட்டிற்கு தயாரான டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் பிப்.20ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. விரைவில் வெளியாக உள்ள புதிய மாடலானது எந்தவித மறைப்பும் இன்றி, சாலை பரிசோதனைகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள டிசைன் மாற்றங்களை அறிய உதவுகின்றன. அதேநேரம், டாடா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த மின்சார எஸ்யுவி ஆனது 593.6 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

593 கிமீ ரேஞ்ச்.. மாஸ் காட்டும் டாடா பஞ்ச்..

ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த மூத்த ஊடகவியலளர் ஓருவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலில், ஜெய்பூரிலிருந்து உதய்பூருக்கு அதாவது ஒரே அடியாக 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல திட்டமிட்டு பயணத்தை தொடங்கியுள்ளார். திட்டமிட்ட வழியில் பயணித்து 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த பிறகும் வாகனத்தில் 67% சார்ஜ் இருந்துள்ளது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கான உதய்பூருக்கு அதாவது 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிறகும், காரில் 34 சதவிகித சார்ஜ் இருந்துள்ளது. இதையடுத்து வாகனத்தின் சார்ஜ் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் வரை பயணிக்க முடிவு செய்யப்பட்டு, தொடர்ந்து முன்னோக்கி சென்றுள்ளனர். அந்த வகையில் அண்டை மாநிலமான குஜராத் எல்லைக்குள் நுழைந்து, ஹிமாத்நகர் வரை சென்றுள்ளது. அதன்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது 593.3 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளித்து ஆச்சரியமூட்டியுள்ளது.

டாடா பஞ்ச் - பேட்டரியில் அப்க்ரேடா?

டாடா பஞ்சில் வழங்கப்பட்டுள்ள அப்க்ரேடட் பேட்டரி தொடர்பான விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், சோதனை பயணமானது மாடலின் கூடுதல் ரேஞ்சை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள 593 கிலோ மீட்டர் என்ற ரேஞ்சானது, இந்திய சந்தையில் மின்சார கார் சந்தையில் டாப் பிரிவில் உள்ள கார் மாடல்களுக்கு இணையானதாகும். பரிசோதனையின் போது பெரும்பாலும் வாகனமானது நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tata Punch EV: அட்ராசக்க..! ஒரே சார்ஜ், 590KM ரேஞ்ச்.. மிரட்டும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், பேட்டரியில் டாடாவின் அப்க்ரேட்..

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் - பேட்டரி அம்சங்கள்

மெக்கானிக்கல் அடிப்படையில் டாடா பஞ்ச் மின்சார காரில் ஏற்கனவே இருக்கும், 25KWh மற்றும் 35KWh ஆகிய பேட்டரி அம்சங்கள் அப்படியே தொடர உள்ளது. இவை முன்புற ஆக்சிலில் அமைக்கப்பட்டுள்ள மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி ஆனது 82hp மற்றும் 114Nm ஆற்றலை உற்பத்தி செய்து 265 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. அதேநேரம், பெரிய பேட்டரி ஆனது 122hp மற்றும் 190Nm ஆற்றலை உற்பத்தி செய்து 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. இந்நிலையில் சோதனையில் காட்டப்பட்டுள்ள கூடுதல் ரேஞ்சை கொண்டுள்ள, புதிய பஞ்சின் ஃபேஸ்லிஃப்டானது 45KWh பேட்டரி பேக்கை நெக்ஸானிலிருந்து கடன் வாங்கியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Tata Punch EV: அட்ராசக்க..! ஒரே சார்ஜ், 590KM ரேஞ்ச்.. மிரட்டும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், பேட்டரியில் டாடாவின் அப்க்ரேட்..

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற டிசைன்

புதிய பஞ்ச் கார் மாடலானது வெளிப்புறத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் தூய்மையான லே-அவுட்டில் பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏர் டேம் மற்றும் ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவையும் திருத்தப்பட்டுள்ளன. அதேநேரம், Y வடிவிலான எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் மற்றும் மையப்பகுதியில் பொருத்தப்படும் சார்ஜிங் வசதி அப்படியே தொடர்கிறது.

பக்கவாட்டில் ஒட்டுமொத்த தோற்றமானது கிட்டத்தட்ட பழைய மாடலை போன்றே அப்படியே தொடர்கிறது. அதேநேரம், குறிப்பிட்ட வேரியண்ட்கள் மீது புதிய அலாய் வீல்களை அறிமுகப்படுத்தப்பவும் டாடா திட்டமிட்டுள்ளது.  இதுபோக ஏற்கனவே இருக்கும் வண்ண ஆப்ஷன்களுடன் ப்ரவுன் மற்றும் ப்ரைட் எல்லோ போன்ற நிறங்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம்.

பின்புற வடிவமைப்பானது அண்மையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமான இன்ஜின் அடிப்படையிலான பஞ்சின் டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது. முழு அகலத்திற்கான லைட் - பார் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.15.32 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Frequently Asked Questions

புதிய டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் எப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது?

புதிய டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல், வரும் பிப்ரவரி 20 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்லும்?

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 593.6 கிலோமீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் என்னென்ன டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

புதிய மாடலில் முன்புற பம்பர், ஏர் டேம், ஸ்கிட் ப்ளேட்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், பின்புறத்தில் புதிய லைட் பார் மற்றும் பம்பர் இடம்பெற்றுள்ளன.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரி அளவு என்னவாக இருக்கும்?

தற்போதுள்ள 25kWh மற்றும் 35kWh பேட்டரி ஆப்ஷன்கள் தொடரலாம். எனினும், சோதனையில் காட்டப்பட்ட கூடுதல் ரேஞ்சை கொண்டு 45kWh பேட்டரி பேக் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

1.25 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடித் தள்ளுபடியை அள்ளித்தந்த Renault - எந்த காருக்கு எவ்ளோ?
1.25 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடித் தள்ளுபடியை அள்ளித்தந்த Renault - எந்த காருக்கு எவ்ளோ?
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
600 கி.மீட்டர் மைலேஜ்... கெத்தா போக Honda SP160 பைக்கை வாங்குங்க..! விலை எப்படி?
600 கி.மீட்டர் மைலேஜ்... கெத்தா போக Honda SP160 பைக்கை வாங்குங்க..! விலை எப்படி?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Embed widget