மேலும் அறிய

Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்

Hyundai Venue N Line 2026: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யு என் - லைன் எடிஷன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Hyundai Venue N Line 2026: ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யு என் - லைன் எடிஷனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஹுண்டாய் என் - லைன் எடிஷன்

ஹுண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வென்யு கார் மாடலை அண்மையில் தான் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து  யாரும் எதிர்பாராத விதமாக என் - லைன் எடிஷனை வெளியிட்டுள்ளது. ஸ்டேண்டர்ட் எடிஷனை போன்றே இந்த என் - லைன் எடிஷனும் வரும் நவம்பர் 4ம் தேதி முறைப்படி சந்தைப்படுத்தப்பட உள்ளது. சப் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் இந்த கார்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் லைன் எடிஷனானது ஸ்போர்ட்டியராகவும், மிகவும் தீவிரமானதாகவும் காட்சியளிக்கிறது. வழக்கமாக ஸ்டேண்டர்ட் எடிஷன் சந்தைப்படுத்தப்பட்ட பிறகு, சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டே என் - லைன் எடிஷன் வெளியிடப்படும். ஆனால், வென்யு காரில் அந்த நடைமுறையை ஹுண்டாய் மாற்றியுள்ளது. 

வென்யு என்-லைன் எடிஷன்: முன்பதிவு தொடக்கம்

ஹுண்டாய் வென்யுவின் ஸ்டேண்டர்ட் மற்றும் என் - லைன் என இரண்டு எடிஷன்களுக்கான முன்பதிவுகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விருப்பமுள்ளவளர்கள் அதிகாரப்பூர்வ ஹுண்டாய் இணையதளம் மற்றும் டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகி, ரூ.25 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். என் - லைன் எடிஷனில் N6 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அதில் N6 வேரியண்டில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதேநேரம்,  N10 வேரியண்டில் 7DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யூ N லைனில் அதே கப்பா 1.0L GDI 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6,000 RPM இல் 120 PS உச்ச சக்தியையும் 1,500 - 4,000 RPM இல் 172 Nm உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஹுண்டாய் வென்யு என்-லைன் - கலர் ஆப்ஷன்

என் லைன் - எடிஷனானது 5 ஒற்றை வண்ண விருப்பங்களிலும், 3 இரட்டை வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. அதன்படி அட்லஸ் ஒய்ட், டைடன் க்ரே, ட்ராகன் ரெட், அபிஸ் ப்ளாக் மற்றும் ஹடெல் ப்ளூ ஆகிய ஒற்றை வண்ண ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. டூயல் டோனில் அட்லஸ் ஒய்ட், ஹேசல் ப்ளூ, ட்ராகன் ரெட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அனைத்திலும் அபிஸ் ப்ளாக் ரூஃப் கலரில் வழங்கப்படுகிறது.

வென்யு என்-லைன் எடிஷன் - வெளிப்புற மாற்றங்கள்

  • சிவப்பு சிறப்பம்சங்களுடன் கூடிய N லைன் பிரத்யேக பம்பர் (முன் & பின்புறம்)
  • •N லைன் சின்னத்துடன் கூடிய டார்க் குரோம் ரேடியேட்டர் க்ரில்
  • N லைன் பிரத்யேக டார்க் மெட்டாலிக் சில்வர் ஸ்கிட் பிளேட் (முன் & பின்புறம்) 
  • LED சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள்
  • சிவப்பு சிறப்பம்சங்களுடன் கூடிய பிரிட்ஜ் வகை ரூஃப் ரெயில்
  • N சின்னத்துடன் கூடிய R17 டயமண்ட் கட் அலாய் வீல்ஸ்
  • சிவப்பு காலிபர் (முன் & பின்புறம்) கொண்ட டிஸ்க் பிரேக்குகள்
  • N லைன் பிரத்யேக விங் வகை ஸ்பாய்லர் •
  • இரட்டை முனை எக்சாஸ்ட் 
  • ரேடியேட்டர் க்ரில், முன் ஃபெண்டர் (RH மற்றும் LH), டெயில்கேட் ஆகியவற்றில் N லைன் சின்னம்

வென்யு என்-லைன் எடிஷன் - உட்புற மாற்றங்கள்

  • சிவப்பு சிறப்பம்சங்களுடன் ஸ்போர்ட்டி கருப்பு உட்புறம் 
  • N லைன் பிரத்யேக ஸ்டீயரிங் வீல் 
  • N லைன் பிரத்யேக கியர் ஷிப்ட் க்நாப் 
  • ஸ்போர்ட்டி மெட்டல் பெடல்கள் 
  • N பிராண்டிங்குடன் ஸ்போர்ட்டி கருப்பு லெதரெட் இருக்கைகள்
  • க்ராஷ்பேட் மற்றும் சென்டர் கன்சோலில் ஆம்பியன்ட் லைட்டிங் (சன்ரைஸ் ரெட்)

வென்யு என்-லைன் எடிஷன் - அம்சங்கள்

  • 12.3 இன்ச் ccNC நேவிகேஷன் சிஸ்டம்
  • 12.3 இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே க்ளஸ்டர்
  • போஸ் பிரீமியம் சவுண்ட் 8 ஸ்பீக்கர் சிஸ்டம்
  • சரவுண்ட் வியூ மானிட்டர் (SVM) மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் (BVM) 
  • ஓவர்-தி-ஏர் (C-OTA) அப்டேட்களை வழங்கும் திறன் கொண்ட 20 வாகனக் கட்டுப்படுத்திகள்
  • ஸ்மார்ட் அரோமா டிஃப்பியூசர் 
  • சூப்பர் ஸ்ட்ராங் பாடி ஸ்ட்ரக்சர் 
  • 70க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் 
  • 41 நிலையான பாதுகாப்பு அம்சங்கள் •
  • 21 அம்சங்களுடன் ADAS லெவல் 2 
  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) 
  • டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) – ஹைலைன்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget