மேலும் அறிய

10 லட்சம்தான் பட்ஜெட்! வரப்போது இந்திய சாலையை ஆளப்போகும் Hyundai Stargazer

ஹுண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள Stargazer காரைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனமாக திகழ்வது ஹுண்டாய். இந்திய சாலையில் அதிகமாக ஹுண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஓடுகிறது. பட்ஜெட் விலை முதல் ஆடம்பரமான கார்கள் வரை பல கார்களைத் தயாரித்து வருகின்றனர். 

Stargazer:

இந்தியாவில் விரைவில் ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார் Stargazer. ஹுண்டாயின் வெனுயூ, கிரெட்டா ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் அமைந்துள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களில் அறிமுகமாக உள்ளது. தாய்லாந்தில் நடந்த எக்ஸ்போ-வில் இந்த கார் காட்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 

விலை எவ்ளோ?

இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ரூபாய் 9.60 லட்சம் முதல் ரூபாய் 17 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டரில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த கார் ஒரு எம்பிவி ரக கார் ஆகும்.

எஞ்ஜின் திறன்:

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 144 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது  இந்த கார் 6 கியர்கள் கொண்டது. வயர்லஸ் சார்ஜர் வசதி இதன் அடிப்படை வேரியண்டில் கிடையாது. டாப் வேரியண்டில் உள்ளது. டைப் சி வசதி உள்ளது. ட்ராக்ஷன், மோட் வசதி உள்ளது.1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

கேபின் சிறப்பான வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் கனெக்ஷன் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங் வசதி, ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், அடாஸ் வசதி உள்ளது.

எதிர்பார்ப்பில் மக்கள்:

இந்த கார் அடுத்தாண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் கியா காரென்ஸ், மாருதி சுசுகி எக்ஸ்எல்6, மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ், மாருதி சுசுகி எர்டிகா ஆகிய கார்களுக்கு இந்த கார் மிகப்பெரிய போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இடவசதி மிகவும் செளகரியமாக இருப்பதால் நடுத்தர மற்றும் பெரிய குடும்பத்தினருக்கு இந்த கார் உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காரின் விலை பட்ஜெட் விலைக்குள் இருப்பதால் இந்திய சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் என ஒரு ஆடம்பர காருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. அடிப்படை வேரியண்டில் ஹேண்ட்ப்ரேக் அளிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டில் ஹேண்ட்ப்ரேக் இல்லாமல் பார்க்கிங் தனி கியராக அளிக்கப்படுகிறது. 

இதன் மைலேஜ் திறன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. நெடுஞ்சாலையில் செல்வதற்கு இந்த கார் மிகவும் உகந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget