மேலும் அறிய

Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!

பிரீமியம் வசதிகளுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் ஹோண்டா ZR-V கார் வெளியாக உள்ளது. இதன் வடிவமைப்பு, இன்ஜின் மற்றும் விலை விவரங்கள் இதோ!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஹோண்டா ZR-V (Honda ZR-V) மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பிரீமியம் வசதிகளுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இந்தக் கார் வெளியாக உள்ளது.

வடிவமைப்பு

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான சிவிக் காரின் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலேயே இந்த ZR-V உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கும் பெரிய எண்கோண வடிவ கிரில், நேர்த்தியான எல்.இ.டி ஹெட்லேம்ப்கள் மற்றும் L-வடிவ டி.ஆர்.எல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏரோடைனமிக் டிசைனில் அமைந்த அலாய் வீல்கள், பின்புறத்தில் சரிவான மேற்கூரை, எல்.இ.டி டெயில் லைட்கள் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் அமைப்புடன் இது பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இன்ஜின் மற்றும் மைலேஜ்

இந்த காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இதனுடன் e:HEV ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகபட்சமாக 184 PS பவரையும், 315 Nm டார்க் திறனையும் இந்த கார் வெளிப்படுத்தும். ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் என்பதால் இது அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான டிரைவிங் ரேஞ்சை வழங்கும்.

சிறப்பம்சங்கள்

உட்புறத்தில் 9-இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.2-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பிரீமியம் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்காக, ஹோண்டா சென்சிங் எனப்படும் லெவல்-2 ADAS தொழில்நுட்பம், பல ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

விலை எப்படி?

இந்திய சந்தையில் இது ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் போன்ற பிரீமியம் கார்களுக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ரூ. 25 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget