மேலும் அறிய

405 கி.மீட்டர் மைலேஜ்.. புகழ்பெற்ற Harley-Davidson X440 T பைக்கின் விலை இவ்ளோதானா?

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்கின் Harley-Davidson X440 T விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் ஹார்லி டேவிட்சன். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு உலகெங்கும் வரவேற்பு உள்ளது. இந்த பைக்கின் விலை மற்ற இருக்க சக்கர வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது விலை அதிகம் ஆகும்.

Harley-Davidson X440 T விலை:

அதேசமயம் Harley-Davidson X440 T பைக் விலை மற்ற ஹார்லி டேவிட்சன் பைக்குகளை காட்டிலும் விலை குறைவு ஆகும். அதைப் பற்றி கீழே விரிவாக காணலாம்,

Harley-Davidson X440 T பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 41 ஆயிரத்து 429. இதில் 440 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 192 கிலோ ஆகும். இது 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக்கின் உயரம் 805 மி.மீட்டர் ஆகும்.

405 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கில் 13.5 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. ஒரு முறை இதன் பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 405 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் உள்ளது. 27.37 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 38 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

6 கியர்கள் இதில் உள்ளது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் இயக்கப்பட உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. ரெயின் மற்றும் ரோட் வசதி உள்ளது. 1 சிலிண்டர், ஏர்/கூல்ட், 2 வால்வுகள் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். 

சிறப்புகள்:

சுவிட்சபிள் ஏபிஎஸ் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. KYB 43mm USD Forks With 130 mm Of Travel சஸ்பென்சன் முன்பக்கமும், Gas Charged Twin Shocks With 7 Step Pre-load Adjustability பின்பக்க சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 805 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும். 

கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ்ட் டேங்கர் 2.7 லிட்டர் வசதி ஆகும். 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. 3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் வசதி உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும்.

வசதிகள்:

ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி, எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப், கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், பாஸ் விளக்குகள், சிக்னல் விளக்குகள் எல்இடியில் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget