ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் மைலேஜ்.. Bounce Infinity E1 இ ஸ்கூட்டர் வாங்கலாமா? விலை எவ்ளோ?

Bounce Infinity E1 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

Published by: ABP NADU

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ ஸ்கூட்டர்

Bounce நிறுவனத்தின் Infinity E1 இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த Bounce Infinity E1 இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.
Infinity E1 Plus
விலை

ரூபாய் 1 லட்சத்து 17 ஆயிரத்து 651

Infinity E1 Standard

ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 222

Infinity E1 Limited Edition

ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 863

100 கி.மீட்டர் மைலேஜ்

இந்த Bounce Infinity E1 இ ஸ்கூட்டரில் 1.9 கிலோவாட் மற்றும் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

சிறப்புகள்

கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 45 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது.

வசதிகள்

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.கீலெஸ் லாக்/ கீலெஸ் அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது.