இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விரைவில் 350 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட Harley-Davidson X350T பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று ஹார்லி டேவிட்சன். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஆனாலும், ஹோண்டா, டிவிஎஸ் போன்று இவர்களுக்கு மிகப்பெரிய சந்தை கிடையாது.
Harley-Davidson X350T:
இந்திய சந்தையில் தங்களது ஆதிக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மிகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக அவர்கள் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Harley-Davidson X350T.
350 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்டாக இந்த பைக் அறிமுகமாகிறது. இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கு அதன் எஞ்ஜின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், அந்த ஜிஎஸ்டி வரி விகிதத்திற்கு ஏற்ப இந்த பைக்கின் எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
இதன் தோற்றம் மிகவும் வசீகரமானதாக அமைந்துள்ளது. இந்த பைக்கில் யுஎஸ்டி சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் த்ரோட்டில் பாடி, ரைடிங் மோட், சுவிட்சபிள் ஏபிஎஸ் வசதி மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. லோ ஸ்பீட் எஜிலிட்டி, ஹைவே ஸ்டெபிளிட்டி மற்றும் ரைட் கம்ஃபர்ட் வசதி உள்ளது.
நெடுந்தூர பயணம்:
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் த்ரோட்டில் சிஸ்டம் ரைடிங் மோட்களுக்கும் உறுதுணையாக உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் இதில் கிடைத்துள்ளது. இந்த பைக்கும் X440T மற்றும் X440S ஆகிய பைக்குகளைக் காட்டிலும் அதிகளவு வரவேற்பை இந்தியாவில் பெறும் என்று கருதப்படுகிறது. நெடுந்தூர பயணங்களுக்கு இந்த பைக் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த பைக்கின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து பெரியளவு தகவல்கள் வெளியாகவில்லை. இந்த பைக் EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் முன்பக்க டயர் பின்பக்க டயரைக் காட்டிலும் பெரியளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர் எல்இடி விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது.
வசதிகள்:
பச்சை நிறத்தில் இந்த ஹார்லி டேவிட்சன் அறிமுகமாகியுள்ளது. நெடுந்தூர பயணத்திற்கு ஏற்ப இதன் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
350 சிசி எஞ்ஜின் பைக் என்பதால் மைலேஜ் நன்றாகவே அளிக்கும் என்பதால் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமானால் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும், இந்த பைக்கிற்கு பிறகு ஹார்லி டேவிட்சனின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















