மேலும் அறிய

Bajaj Dominar 400: ரூ.37,000 விலையை குறைத்த பஜாஜ்.. அப்க்ரேடட் டாமினர் 400 வந்தாச்சு - முழு விவரம், அப்டேட்கள் என்ன?

Bajaj Dominar 400: இந்திய சந்தையில் பல்சர் மற்றும் கேடிஎம் 390 ட்யூக் மாடலுக்கு போட்டியாக டாமினர் 400 மோட்டார் சைக்கிள் மாடலை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Bajaj Dominar 400: பஜாஜ் நிறுவனம் 350சிசி இன்ஜின் கொண்ட தனது புதிய டாமினர் 400 மாடலின் விலையை 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

பஜாஜ் டாமினர் 400 பைக் வந்தாச்சு

பஜாஜ் நிறுவனம் அண்மையில் தனது ட்ரையம்ப் மோட்டர் சைக்கிள் மாடல்கள் முழுவதையும், 349சிசி இன்ஜினுக்கு மாற்றி மறுஅறிமுகம் செய்தது. இதன் மூலம் முன்பு இருந்த 40 சதவிகிதம் வரி என்ற அடுக்கிலிருந்து தற்போது 18 சதவிகித வரி அடுக்கிற்கு மாறியுள்ளது. அதே பாணியில் தற்போது டாமினர் 400 மாடலும் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, முன்பு இருந்ததை காட்டிலும் 37 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையில், வெறும் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கே புதிய மோட்டார் சைக்கிள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 

பஜாஜ் டாமினர் 400 - புதுசா என்ன இருக்கு?

இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, 350சிசி கொள்ளளவை தாண்டிய முந்தைய இன்ஜினின் போரை மாற்றாமல், ஸ்ட்ரோக்கை குறைப்பதன் மூலம் சிறிய 349சிசி மோட்டாரை பஜாஜ் உருவாக்கியுள்ளது. ட்ரையம்பை பொறுத்தவரையில் இத்தகைய மாற்றத்தால், உச்சபட்ச ஆற்றல் உற்பத்தியில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இழுவை திறன் என்பது மிகப்பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. அதேநேரம், டாமினரை பொறுத்தவரையில் உச்சபட்ச சக்தி அப்படியே இருக்க, இழுவை திறன் குறைந்துள்ளது.

Bajaj Dominar 400: ரூ.37,000 விலையை குறைத்த பஜாஜ்.. அப்க்ரேடட் டாமினர் 400 வந்தாச்சு - முழு விவரம், அப்டேட்கள் என்ன?

பஜாஜ் டாமினர் 400 - புதிய இன்ஜினின் திறன்

சிறியதாக்கப்பட்ட 349சிசி சிங்கிள் சிலிண்டரானது லிக்விட் கூல்ட்  எடிஷனில் 40.62hp மற்றும் 33.2Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. இதன் மூலம் 1.8Nm அளவிலான இழுவை திறனை டாமினர் 400 இழந்துள்ளது. திருத்தத்திற்கு முந்தைய பழைய டாமினர் 400 மாடலானது, கேடிஎம் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 40hp மற்றும் 35Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 373சிசி இன்ஜினை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றத்தால் டாமினர் 400 ஆனது 3 கிலோ எடையையும் இழந்து 190 கிலோ மொத்த எடையை கொண்டுள்ளது.

பஜாஜ் டாமினர் 400 - மற்ற அப்டேட்கள் என்ன?

ட்ரையம்பை போன்றே இன்ஜின் அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும், பெயரில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. இன்ஜின் அப்டேட்டை தவிர்த்து புதிய மாடலானது வெளியே செல்லும் பழைய மாடலை அப்படியே பிரதிபலிக்கிறது. பச்சை மற்றும் கருப்பு என்ற இரண்டு வண்ண ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. இதுபோக வசதிகள் மற்றும் டூரிங் அடிப்படையிலான அக்செசரிஸ்களும் டாமினர் 400 மாடலில் அப்படியே தொடர்கின்றன.

பழைய மாடல் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய எடிஷனானது 37 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை குறைக்கப்பட்டு 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வரம்பால் டாமினர் 400 மாடலானது டாமினர் 250 மாடலை காட்டிலும் 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாகும். இதே வரிசையில் NS400Z மாடலையும் பஜாஜ் இத்தகைய மாற்றத்திற்கு உட்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் சந்தையில் பஜாஜ் டாமினர் 400 மாடலானது, ட்ரையம்ப் ஸ்பீட் 400, கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பஜாஜ் பல்சர் NS400Z ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆர்மி லுக்கில் மாஸ் காட்டும் RE Classic 350 Gorkha Edition விலை, எடை எவ்வளவு? இதில் என்னெல்லாம் ஸ்பெஷல்?
ஆர்மி லுக்கில் மாஸ் காட்டும் RE Classic 350 Gorkha Edition விலை, எடை எவ்வளவு? இதில் என்னெல்லாம் ஸ்பெஷல்?
ரூ.3.5 லட்சத்தில் கார் வாங்க போறீங்களா? மைலேஜ், விலையில் மிடில் கிளாஸ் பேமிலிக்கு எது பெஸ்ட் கார்?
ரூ.3.5 லட்சத்தில் கார் வாங்க போறீங்களா? மைலேஜ், விலையில் மிடில் கிளாஸ் பேமிலிக்கு எது பெஸ்ட் கார்?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget